என்று அவளுக்கு அற்புதமான அடைமொழி சூட்டுகின்றான் கவிச்சக்ரவர்த்தி. எனவே, அவள் கூறிய கடுஞ்சொற்கள் எல்லாம் மேலோட்டமாகப் பார்ப்பதற்குக் கடுஞ்சொல்லாகஅமைந்தனவே தவிர, உண்மையில் அவை மாபெரும் தியாகத்தை அடிப்படையாகக் கொண்ட ‘தூமொழிகள்’ என்பதை "தூ மொழி மடமான்" (1484) என்ற சொல்லின் மூலம் பெற வைத்துவிடுகின்றான். ஆக இந்தக் கன்யா சுல்கக் கதையைவெளிப்படையாகச் சொல்லாமல், மறைமுகமாகவே கொண்டு செல்வதில் இத்தனை பல வெற்றிகளைக்கவிச்சக்கரவர்த்தி பெறுகின்றான் என்பதை நாம் அறிய முடிகின்றது. இனி அடுத்தபடியாக அயோத்தியா காண்டத்தில் வருகின்ற ஒப்பற்ற பாத்திரம் குகன் என்றபாத்திரமாகும். இந்தப் பாத்திரத்தை வால்மீகி அடியொற்றிப் படைத்திருந்தாலும், ஈடு இணையற்றமுறையில் உலக இலக்கியத்தில் காணமுடியாத அளவுக்கு அற்புதமான ஒரு படைப்பாகக் குகனைப் படைத்துவிடுகிறான்கவிச்சக்கரவர்த்தி. குகன் அன்பே வடிவாக இருக்கின்ற ஒரு பாத்திரம். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில்அன்பைத் தவிர, வேறு ஒன்றும் இல்லாத ஒரு பாத்திரம். சாதாரணமாக உலகத்தில் புறத் தோற்றத்தைக் கொண்டு அகத்தை அளவிடலாம் என்றுசொல்வார்கள். அந்த ஒரு பழமொழிக்கு நேர் எதிராகப் பார்ப்பதற்கு முரட்டுத்தனமான உடம்பும், கடுமையான பார்வையுடையவனுமாகிய குகன், அகத்தைப் பொறுத்தமட்டில் அன்பே வடிவாக அமைந்திருக்கிறான்என்பதை ஒப்பற்ற முறையிலே படைத்துக் காட்டுகிறான் கவிச்சக்கரவர்த்தி. இப்படி ஓர் அன்பின் வடிவாகவுள்ள பாத்திரத்தைப் படைத்ததன் மூலம் அன்பு வழி செல்கிறவர்களுக்குகல்வி, கேள்வி, முதலிய கலையுணர்வு தேவையில்லை என்பதையும் வைத்துக்காட்டுகிறான் கவிச்சக்கரவர்த்தி.ஆகத் தாயினும் நல்லானாக ஒரு பாத்திரத்தைப் படைத்துக் காட்டுவதன் மூலம் அயோத்தியா காண்டத்தில்ஒரு சிறந்த பாத்திரமாக அமைந்துவிடுகிறான் குகன். அதுமட்டுமல்ல. ஆழ்வார்கள் பாடலில் ஆழங்கால்பட்டவனாகிய கவிச்சக்கரவர்த்தி வால்மீகத்தில்இல்லாத சில பகுதி |