களைக் புகுத்தும்போது ஆழ்வார் பாடலில் காணப்பட்ட ஒன்றை தனக்கு முன்னோடியாக எடுத்துக்கொள்கிறான். ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன்னருள் சுரந்து, ‘மாழை மான் மடநோக்கி உன் தோழி; உம்பி எம்பி’ என்று ஒழிந்திலை உகந்து, தோழன் நீ எனக்கு இங்கு ஒழி, என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட, ஆழி வண்ண! நின் அடியினை அடைந்தேன் அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே! (நாலாயிரம் 1418) என்ற ஆழ்வாரின் பாசுரத்தை மனத்தில் வைத்துக்கொண்டு, பிராட்டியை குகனுக்கு அறிமுகம்செய்து வைக்கிறான் இராகவன் என்ற ஒரு நிகழ்ச்சியை உண்டாக்கி, படகிலே சென்றபோது சீதையைக் காட்டி ‘இவர் உன் கொழுந்தி’, எனவும், இலக்குவனைக் காட்டி ‘இவன் உன்தம்பி,’ எனவும் இராமன் அறிமுகம் செய்து வைப்பதாக ஒரு நிகழ்ச்சியைக் கம்பன் படைக்கிறான். "இளவல் உன் இளையான்இந் நன்னுதலவள் நின் கேள்" (1994) என்பதாக பிராட்டியை அறிமுகம் செய்து வைக்கப்படுகின்ற, அரச குடும்பத்தை அல்லாத பாத்திரங்களில்தன்னந்தனியாக நிற்பவன் குகப்பெருமான். இந்த நிகழ்ச்சியைப் பின்னர் கேள்விப்பட்டவனாகிய பரதனும் கூட, "இன் துணைவன் இராகவனுக்கு; இலக்குவற்கும், இளையவற்கும், எனக்கும் மூத்தான்" (2367) என்று குகனைக் கோசலைக்கு அறிமுகம் செய்து வைக்கின்றபோது அன்பின் வடிவாகவேஇருக்கின்ற பாத்திரம் எவ்வளவு எளிதாக சக்கரவர்த்தி குடும்பத்தில் உறவு வைத்துக்கொள்கிறது என்பதை எடுத்துக் காட்டுகின்ற முறையிலே அமைத்துவிடுகிறான். குகன் இராமனை முதன்முதலிலே காண வருகின்றபோது தேனும் மீனும் திருத்திக் கொணருகிற காட்சிவால்மீகத்தில் இல்லாத முறையில் இங்கே கம்பன் புகுத்துகிறான். அவனைப் பொறுத்த மட்டில்உணவு என்பதுதேனில் ஊறவைத்த மீனாகும். ஆகவே,அந்த உணவைக் கொண்டுவரும்போது இராகவன் அதை உண்பானா.மாட்டானா என்ற ஆராய்ச்சிக்கே இடமில்லை. |