38

     "ஆழ நெடுந் திரை ஆறு கடந்து இவர் போவாரோ?"     (2317)

என்று சினக்கின்றான்.

     இப்படி முன்பின் தெரியாத ஒருவனிடம் பகை கொள்ளக் காரணம் யாது
என்று சிந்தித்தல் வேண்டும்.

     குகனைப் பொறுத்தமட்டில்  பரதனை முன்பின் அறியாதவன்.  ஆனால்,
பரதன் என்ற  பெயருடையஒருத்தன் சூழ்ச்சியின் காரணமாக அரசைப்
பிடுங்கிக்கொண்டு  இராகவனைக் காட்டிற்கு அனுப்பிவிட்டான் என்ற
எண்ணத்தில் குகன் இருக்கிறான்.  ‘இந்த எண்ணம்  அவனுடைய  மனத்தில்
எப்படித் தோன்றிற்று?இதற்கு யார் காரணம்?’ என்று ஆராய்வோமேயானால்
கம்பநாடன் அயோத்தியா காண்டத்தில் அதற்குஇடம் வகுத்துத் தருகின்றான்.

     இராகவனும்,  பெருமாட்டியும் உள்ளே உறங்க வெளியே இளைய
பெருமாள் காவல் காத்துக்கொண்டுநிற்கின்றான். அவனோடு உடன்
நிற்கின்றான் குகன். அந்த நிலையில் இராகவன் எப்படி அரசைத்துறந்து
வந்தான் என்று கேட்க இலக்குவன் சொல்கிறான்.

     முன்கோபக்காரனாகிய  இலக்குவன் பரதனை  இன்னார்  என்று புரிந்து
கொள்ளவில்லை.  புரிந்துகொள்ளமுயலவும் இல்லை.  அதற்குப் பதிலாகக் 
கைகேயியின் சூழ்ச்சியில் அவனும் ஒரு பங்குதாரன்என்றுதான்
நினைத்திருந்தான்.  ஆகவே,  தன் னுடைய மனத்தில் தோன்றிய
கசப்புணர்ச்சியைப்பரதன் மாட்டுக்கொண்ட காழ்ப்புணர்ச்சியை,  கோபத்தை முழுவதுமாகக் குகனிடம் விளக்கிவிட்டான்.ஆகவே, பரதனைப் பற்றி
முன்பின் அறியாதவனாகிய குகன்,  இந்தப் படத்தைத்தான் மனத்தில்
வைத்துக்கொண்டிருக்கிறான்.ஆகவே,

     "ஆழ நெடுந் திரை ஆறு கடந்து இவர் போவாரோ"      (2317)

என்று சினக்கின்ற சூழ்நிலை உருவாகின்றது.

     ஆயினும் தன்னைக் காண வருகின்ற பரதனைத் தூரத்தில் இருந்து
பார்த்தபோது,  பரதன் அணிந்திருக்கிறதவக் கோலத்தையும்,  அவன்
முகத்தில் தேங்கியிருக்கின்ற துக்கத்தையும் பார்த்த போதே

     "நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்,  அயல்.  நின்றான்
    தம்பியையும் ஒக்கின்றான்"
                             (2332)