என ஓரளவு பரதனை அடையாளம் காணக்கூடிய சூழ்நிலைக்கு வந்து விடுகின்றான். பரதனைப் பற்றி அவன் கேள்விப்பட்டதை வைத்துக்கொண்டு பரதன் எத்தகையவனாக இருந்திருத்தல்வேண்டும்என்று நினைத்திருந்த நினைவுக்கும், நேரிடையாகத் தான் பரதனைக் காணும் போது மனத்தில் தோன்றியநினைவுக்குமுள்ள மாறுபாட்டை நன்கு உணர்ந்துவிட்டவனாகிய குகன் உடனே "எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு" (2332) என்று பேசுகின்றான். அதுமட்டுமல்ல. பின்னர்ப் பரதனோடு உரையாடிக்கொண்டிருந்த நேரத்தில், அவனுடன் இருந்துபரதனுடைய பண்பு நலன்களை எல்லாம் அறிந்துகொண்டவனாக, தன்னுடைய நுண்மாண் நுழைபுலம் காரணமாக அற்புதமாக எடைபோட்டு "ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா!" (2337) என்று சொல்லுகின்ற அளவுக்குப் பரதனை உயர்த்திவிடுகின்றான் என்பதை அறிய முடிகின்றது. ஆக அயோத்தியாகாண்டத்தில் - வால்மீகத்திலிருந்து கொஞ்சம் மாறுபட்ட முறையில், ஈடு இணையில்லாப் பாத்திரமாக தமிழகத்தில் முதன் முதலாகக் காணப்பட்ட பக்தி இயக்கத்தின்அல்லது அன்புவழி இறைவழிபாட்டின் அடிப்படையில் குகன் என்ற ஒரு பாத்திரத்தைப் படைத்துக் கம்பன்அதில் முழு வெற்றி அடைகின்றான் என்பதை அறிய முடிகின்றது. இனி அடுத்தபடியாக அயோத்தியா காண்டத்தில் எஞ்சி நிற்கின்ற பாத்திரம் பரதனாவான்.முதல் மூன்று நான்கு படலங்கள் தாண்டி பள்ளிபடைப் படலத்தில்தான் பரதனைச் சந்திக்கின்றோம்.பாட்டன் வீட்டில் இருந்த அவனைத் தூதுவர்கள் சென்று அழைத்து வருகின்றார்கள். அயோத்திக்குள்நுழைகின்ற வரையில் தவறு ஏதும் நிகழ்ந்ததாகப் பரதனுக்குத் தெரியவேயில்லை. ஊருக்குள் நுழைந்ததும்ஒளி இழந்து நிற்கும் ஊர் நிலை கண்டு ஆச்சரியப்பட்டு, நேரே தசரதனைக் காணச் செல்கின்றான். தசரதன் இல்லாதபோது தாயைக் கண்டு விசாரிக்கின்றான். அப்போது - தான் தந்தை ‘வானத்தான்’ என்றும் அண்ணன் ‘கானத்தான்’ என்றும் அறிந்துகொள்ளுகின்றான். இந்த நிலையில் பரதனிடம் |