தியா நகரம் முழுவதும் அவன் மாட்டு எல்லையற்ற மதிப்பும், மரியாதையும் கொண்டதாகப் புலப்படுவதைக் காணுகின்றோம். பரதன் புறப்பட்டுச் செல்கின்றான். குகனைச் சந்திக்கின்றான் அந்தச் சந்திப்பு எவ்வாறுநிகழ்ந்தது என்பதை முன்னரும் பார்த்தோம். குகன் இவனை அறிந்துகொள்வதற்கு வாய்ப்புகள் கிடைத்தபோது "ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ?" (2337) என்று குகனால் பாராட்டப்படுகின்ற அளவுக்குப் பரதனுடைய பண்பாடு வெளிப்படுகின்றது. இனி பரத்துவாசனுடைய ஆசிரமத்தில் படைகள் எல்லாம் விருந்துண்ண காயும், கனியும், கிழங்கும்அருந்தித் தரையிலே படுத்துத் தன்னுடைய அண்ணன் மேற்கொண்ட தவத்தைத் தானும் மேற்கொண்டவனாகப்பரதன் காட்சியளிக்கின்றான். சித்திரகூடத்தை நெருங்குகின்ற காலத்தில் அங்கே படைகள் வரும் தூசிப்படலத்தைப் பார்த்துஇலக்குவன், பரதன் போருக்கு வருகிறான் என்று சொல்லி யுத்த சன்னத்தனாகிறான். அப்போதுபடைகளை எல்லாம் ஓர் எல்லையில் நிறுத்திவிட்டு, தவக்கோலத்தோடு நடந்து வருகின்ற பரதனைப் பார்த்தபோது இலக்குவன் ஆடிப்போகிறான். நெருங்கி வந்த பரதனுக்கும், இராமனுக்கும் நடைபெறுகின்ற உரையாடலில் இருவரைப் பற்றியும்அறிந்துகொள்ள முடிகின்றது. அன்பின் எல்லையில் நிற்கின்றவனும், மாபெரும் தவற்றைத் தசரதன்இழைத்துவிட்டான், அதை எப்படியாவது போக்க வேண்டுமென்கிற முடிவோடு இருக்கின்றவனும் அது முடியாவிட்டால்இராமனைப் போலத் தவக்கோலம் பூண்டு காட்டிலே தங்கிவிட வேண்டும் என்ற முடிவோடு வந்தவனுமாகியபரதன் ஒரு புறம் அமைதியே வடிவாக நடப்பனவற்றையெல்லாம் சாட்சி மாத்திரையாகப் பார்த்துக்கொண்டு, இடையே வருவனவற்றுக்கு எவ்விதத்தடையும் செய்யாமல் ‘ஆருயிர் முறைவழிப்படூஉம்’ என்று கருதும்இராமனையும் ஒரு சேரக் காணுகின்றோம். தசரதன் இறந்தது முதலான செய்திகளை எல்லாம் கேட்டு ஒருவாறு ஆறுதல் அடைகிறான் இராகவன்.அடுத்துப் பரதனை நோக்கி" இந்தத் தவக்கோலம் பூண்டு நீ ஏன் வந்தாய்? நீ அரசாள |