வேண்டியவன் அல்லவோ?" என்று கேட்கின்ற கேள்வியும் அதற்குப் பரதன் தருகின்ற விடையும்,அந்த விடையில் இராகவனே சிக்கிக்கொள்வதையும் காண்கின்றோம். ‘நீ பிறந்ததனால் இந்தப் பூமி உனக்குச் சொந்தம். ஆகவே, இதனை ஆள்வாயாக’ என்றுஇராகவன் சொல்லியவுடன், அதனை அப்படியே ஏற்றுக்கொள்கிறான் பரதன். ‘ஆம், இப்போது நான் சக்கரவர்த்தி. சக்கரவர்த்தியாகிய நான் உன்னைக் கேட்டுக்கொள்கிறேன்.நீ வந்து ஆட்சி செய்வாயாக’ என்று தானே அரசன் என்ற முறையிலே ஆணையிடும் பரதனைப் பார்த்துஇராகவன் நெகிழ்ந்துவிடுகிறான். "ஐயா! சரி, உன்னுடைய ராஜ்யத்தை இப்போது நீ எனக்குத் தந்துவிட்டாய் அல்லவா. நான்இப்போது சக்கரவர்த்தியாகிவிட்டேன். இப்போது நான் சொல்வதை நீ கேட்பாயாக. பதினான்குஆண்டுகள் முடிந்து நான் திரும்புகிற வரையில் எனக்காக நீ இருந்து ஆட்சி செய்வாயாக" என்று சொல்லுகின்ற அந்த உரையாடலைப் பார்க்கும்போது சேக்கிழார் கூறும், "அளவிலாப் பரிவினால் வந்த இடுக்கண்" (பெ.பு.எறிபத்தர்-47) என்ற தொடர் நினைவிற்கு வருகிறது. எல்லையில்லாப் பரிவினால் இவர்களின் இடையேநடைபெறுகின்ற உரையாடல், கற்பவர் மனத்தைக் கரைத்துவிடுவதைக் காண்கின்றோம். தேவர்கள் குறுக்கிட்டுப் பரதனைப் பார்த்து, ‘நீ நாட்டைச் சென்று ஆள்வாயாக. இதுதான்எங்களுடைய விருப்பம்’ என்று சொல்லுகின்ற வரையில் பரதனை அமைதிபடுத்த முடியவில்லை. அந்த நிலையில்வேறு வழியில்லாமல் அரசை ஏற்றுக்கொள்ளுகிற பரதன், இராமனைப் பார்த்து, "நான் உன் ஆணையின்படிசெல்லுகிறேன். நீ உன் திருவடியைத் தரவேண்டும். உன் திருவடி தான் ஆட்சி செய்யும். அதன் பிரதிநிதியாக நான் இருந்து 14 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பை நடத்துகிறேன்" என்று சொல்லும்போது பரதனது புதியபரிமாணத்தைக் காணமுடிகின்றது. ஆகவே, அயோத்தியா காண்டத்தினிடையே காட்சி தருகிற பரதன் எல்லையற்ற வேகத்தோடுவளர்வதையும், வளர்ந்து இறுதியாக ஆயிரம் இராமரும், அவனுக்குச் சமமில்லை என்று சொல்லுகின்றபுதிய பரிமாணத்தை அடைகின்றதையும் அயோத்தியா காண்டத்திலேயே பார்த்துவிடுகின்றோம். ஆகவே, பரதனின் முழுவளர்ச்சியைக் காட்டுவது அயோத்தியா காண்டமாகும். இவ்வளவு |