மைந்தனாகிய பரதன், ஆயிரம் இராமனுடைய வளர்ச்சியை அடைகின்ற பரிமாணம், அன்பின்வடிவாக இருக்கின்ற குகன் ஆகிய பாத்திரங்களை எல்லாம் காண்பதற்கு அயோத்தியா காண்டம்உதவுகிறது. ஆகவே, மந்திரப் படலத்தில் தொடங்கி, திருவடி சூட்டு படலத்தில் முடிகின்ற அயோத்தியாகாண்டம் கம்பனுடைய பேராற்றலுக்கு ஒப்பற்ற எடுத்துக்காட்டாக இருப்பதையும், பாத்திரப்படைப்பில்உலகக் காப்பியங்களுள், இப்படிப் பாத்திரப் படைப்பைச் செய்தவர் யாரும் இல்லை என்று சொல்லத்தக்கஅளவில் பாத்திரங்களைக் கவிச்சக்கரவர்த்தி அமைத்திருக்கிறான் என்பதையும் அறியும்போதுஅயோத்தியா காண்டம் உண்மையிலேயே ஆறுகாண்டங்களில் மிகச் சிறந்த ஒரு காண்டம் என்பதை உணரமுடிகின்றது. |