2. இராமனின் ஏற்புநிலை 2.1. பட்டாபிடேகச் செய்தியறிந்த இராமனின் மனநிலை 2.2. கைகேயியின் கட்டளையும் இராமனின் மனநிலையும் 2.3. சீதையும் இலக்குவனும் இராமனுடன் காடு செல்லல் 2.3.1. சீதை இராமனுடன் செல்லத் துணிதல் 2.3.2. இலக்குவனும் உடன்வர இராமன் இசைதல் 2.3.3. சுமித்திரையின் அறிவுரை 3. பரதனின் ஏற்பு நிலை 3.1. பரதன் அரசேற்க மறுத்தல் 3.2. பரதன் குகன் சந்திப்பு 3.3. பரதன் இராமன் சந்திப்பு குறிப்பு இக்கட்டுரையைப் படிக்க நேரும் அறிஞர் பெருமக்கள் இதற்குமுன் வெளிவந்த பாலகாண்ட ஒப்பியலாய்வுக்கட்டுரையினையும் ஒருமுறை படித்துக்கொள்ளுமாறு வேண்டுகின்றேன். அயோத்தியா காண்டக் கதைக்கரு இராம காதையின் முதற்காண்டமாகிய பாலகாண்டத்தில் கதைத் தலைவனின் பிறப்பு, வளர்ச்சி, ஒழுகலாறு, திருமணம், வீரம் ஆகிய செய்திகள் ஆற்றொழுக்காகப் பேசப்பட்டன. அறத்தின் காவலனாக, நாயகனாகப் பரிணமித்தற்குரிய அடிப்படைக்கூறுகள் பாகம்பட்டு நிற்கும் பக்குவநிலையை இலக்கியப்படுத்திக்காட்டிய தன்மையைப் பாலகாண்ட முன்னுரைப் பகுதியில் கண்டோம். அயோத்தியா காண்டத்தில் கதைத்தலைவனின் அறங்கடைக் கூட்டுதற்குரிய ஒழுகலாறுகள் சோதனைக்குள்ளாகும்நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. அதாவது, இராமகாதையின் கதையோட்டம் முதல் திருப்புமுனையைச்சந்திக்கின்ற கட்டமாக அயோத்தியா காண்டம் நிகழ்ச்சிகள் அமைகின்ற பாங்கினைக் காண்கிறோம்.இலக்கிய முருகியலின்படி அயோத்தியா காண்ட நிகழ்ச்சிகள் இராமகாதையின் தோற்றுவாயாகக் கருதப்பெறும். இக்காப்பியம் |