துளசியின் இராம சரித மானசத்தை மானச அமுதம் என்னும் பெயரில் மிக விரிவான உரைவளத்துடன்பதிப்பித்த ஸ்ரீ அஞ்சனிநந்தன் சரண் என்னும் திறனாய்வாளர் இவ்வினாவை எழுப்பி அதற்கு விளக்கம்காண முயன்றுள்ளார். கைகேயிக்குப் பொது மக்கள் செய்தி அறிவிக்காமைக்கு அவர் இரு காரணங்களைத்தருகிறார்: ஒன்றுகைகேயி இராமனிடம் பேரன்புடையவள். அவளுக்கு இச்செய்தி அறிவிக்கப்பட்டால்அவளும் பேரானந்தம் அடைந்து கோசலை, சுமித்திரையைப் போலத் தான தருமங்கள் செய்துகோயிலுக்குச் சென்று வழிபாடுகள் நடத்துவாள்; நடத்தவே, பட்டாபிஷேகம் இனிது நிறைவேறிவிடும், நிறைவேறிவிட்டால் அவதார நோக்கம் நிறைவேறாது. எனவே, கைகேயிக்குப் பொதுமக்கள் செய்தி அறிவிப்பதாகக் கவிஞர் படைக்கவில்லை. இரண்டாவது காரணம்: திருமணத்தின்போது கைகேயிக்குத் தந்திருந்த ராஜ்ய சுல்கச் (கன்யாசுல்கம்) செய்தியைத் தசரதன் எவ்வளவுதான் மறைத்து வைத்திருந்தபோதிலும், இராமன்மீது அளவு கடந்த பற்றும் பக்தியும் வைத்திருந்த அரண்மனைவாசிகள் அதனை அறியாமல் இருக்கமாட்டார்கள். எனவே, கைகேயி இராமனிடத்துப் பேரன்பு உடையவளாயினும், அரசியல் தொடர்பான செய்திகளில்அவள்மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே தான், அவர்கள் வேண்டுமென்றே கைகேயிக்குச் செய்தியைக்கூறவில்லை. இல்லையென்றால், அரசன் முடிசூடுதல் போன்ற ஒரு தலைமைச் செய்தியை அரண்மனைப் பெண்டிரும், நகர மக்களும் அறிந்திருக்கத் தசரதனின் இளைய மனைவியும், அவனுடைய தனியன்பிற்கு உரியவளுமான கைகேயிக்குஇச்செய்தி எட்டவில்லை என்பதும் முதன் முதலாக மந்தரைதான் இதனை அவளுக்குக் கூறுகிறாள் என்பதும் நம்பகத்தன்மை யிழந்து பொருந்தாக் கூற்றாகி விடும்.8 அவதார நோக்கம், யதார்த்தப் பார்வை என்னும் இருகோணங்களிலும் பார்க்குமிடத்து ஸ்ரீஅஞ்சனிநந்தன் சரண் அவர்களின் கருத்து பொருத்தமுடையதாய்த் தோன்றுகிறது. மூலமும் வழி நூல்களுமானஎல்லா இராமாயணங்களும் இவ்விஷயத்தில் மௌனம் காப்பதன் நோக்கமும் ஓரளவு தெளிவாகிறது. துளசி ராமாயணத்தில் கோசலைக்கும் சுமித்திரைக்கும் செய்தி அறிவித்த தசரதன் கைகேயிக்குஇச்செய்தியைக் கூறாது விட்டான் என்ற ஒரு குற்றச்சாட்டை ஓம்கார் கொல் என்னும்
8. மானசம்- பிரியூசகி அயோத்தியாகாண்டம், II.84, P. 55. |