அறிஞர் துளசி மீது சுமத்துகிறார்.9 துளசி ராமாயணத்தில் (II. 8) இந்தச் செய்தி காணப்படவில்லை. துளசி மட்டுமல்ல, வேறெந்தக் கவிஞருமே தசரதன் இச்செய்தியைக் கோசலைக்கும் சுமித்திரைக்கும் கூறியதாகக் காட்டவில்லை. எனவே, டாக்டர் கௌல் அவர்களின் குற்றச்சாட்டு பொருத்தமாகப் படவில்லை. 1.2.3. இராமனுக்கு அறிவுரை முடிசூடும் முன்னர் அரசாளுதல் குறித்த அறிவுரைகளைத் தசரதன் அரசவையிலேயே கூறுவதாக வான்மீகம்கூறுகிறது. (II. 3.42 - 46) பட்டாபிஷேகத்திற்கு முன்னாள் இராமன் மேற்கொள்ள வேண்டிய விரதம் முதலியவற்றை வசிட்டன் கூறுகிறான். (II. 5.10 -12) கம்பனில்இருவகை அறிவுரைகளையும் வசிட்டனே கூறுமாறு பணிக்கப்படுகிறான். (II.2.14-19) தமிழில் தோன்றிய இராம நாடகம் வான்மீகத்தைப் பின்பற்றித் தசரதனே அறிவுரைகூறுவதாகக் காட்டுகிறது. (அங்கம் 1. களம் 1). தெலுகுரங்கநாத ராமாயணமும் பாஸ்கர ராமாயணமும் விரத முறைகளை மட்டும் வசிட்டன்கூறுவதாகக் குறிப்பிடுகின்றன. அரசியல் நெறிகளை யாரும் கற்பிப்பதாகக் குறிப்பு இல்லை. மொல்ல ராமாயணத்திலும் கன்னடதொரவெ ராமாயணத்திலும் மலையாள கன்னச ராமாயணத்திலும் எத்தகைய அறிவுரையையும் யாருமே இராமனுக்குக் கூறவில்லை. அத்யாத்மராமாயணத்தைப் பின்பற்றும் துளசிராமாயணமும் எழுத்தச்சனின்ராமாயணமும் வசிட்டன் இராமனுக்கு விரத முறைகளைக் கற்பிப்பதை மிகச் சுருக்கமாகக் கூறுகின்றன. தொகுப்புரை இராமனுக்கு அளிக்கப்படும் அறிவுரைகளில் அரசியல் நெறிகளைக் கற்பிப்பதுதான் முக்கியமானதாகத்தோன்றுகிறது. இதனை வான்மீகம், கம்ப ராமாயணம் ஆகிய இரண்டு மட்டுமே கூறுகின்றன. இராம, நீ இயல்பாகவே நற்குண நற்செய்கைகளை உடையவன். எனினும் குணவான்களுக்கும் நன்மைதரக்கூடிய சில அறிவுரைகளை நான் உனக்குக் கூறுகிறேன்.
9. கஸ்மீரி மற்றும் ஹின்தி ராமகதா காவ்ய ம் துலனாதமக் அத்யாயம், பிரதி . 73.155. |