67

எப்போதும் ஐம்புலன்களை வென்றவனாய் இரு காமக்
குரோதங்களால் அரசர்களிடத்து  உண்டாகும் எழுவகைக்
குற்றங்கள்10 உன்னை அணுகாமல் பார்த்துக்கொள்.

அடைக்கலமானவர்களைக் காத்தல், ஏழைகளுக்கிரங்கி உதவுதல்
போன்ற சமூக ஒழுக்கங்களை எப்போதும் கைவிடாமல் ஒழுகுவாயாக.
அமைச்சர்கள் முதலானோரை அநுசரித்து நடந்து அவர்களை
மகிழ்விப்பாயாக.

கருவூலங்கள், படைக்கலக் கொட்டில்கள்,  தானியக் கிடங்குகள்
ஆகியவற்றை நன்கு பாதுகாத்து  நாட்டைநன்கு பரிபாலனம்
செய்பவன் பிற அரசர்களால் நன்கு மதிக்கப்படுவான்.  நீயும்
அத்தகையவனாக இருக்க முயற்சி செய்வாயாக.

என்று தசரதன் அறிவுரை கூறுவதாக வான்மீகம் காட்டுகிறது. (II.3.42-46)

     கம்ப ராமாயணத்தில் வசிட்டன் கூறும் அறிவுரை மிகவும் விரிவாக
அமைகிறது.  (II.2.14-19). வான்மீகம் கூறும் புலனடக்கம்,  காமநீக்கம், 
சூதுவிலக்கல்,  அமைச்சரைச் சார்ந்தொழுகல்,பிற மன்னர்களுடன் நட்புறவு, 
மக்களை உயிராகக் கருதிக் காப்பாற்றுதல்,  செல்வம் முதலியவற்றைப் 
பேணுதல் ஆகியன பற்றிய அறிவுரைகள் கம்பனிலும் காணப்படுகின்றன. 
கருத்துகள் பொதுவாகஇருநூல்களிலும்  காணப்பட்டாலும்,  கம்பனிடம் 
அவை கவித்துவம் பெற்றுக் கவிச்சக்கரவர்த்தியின்தனி முத்திரையுடன்
விளங்கி இலக்கிய இன்பத்தை மிகுவிக்கின்றமையை வாசகர்கள் எளிதின்
உணரலாம்.

     இனி,  வான்மீகம் கூறாத ஒரு கருத்தை மிகவும் அழுத்தம் தந்து
கம்பன் கூறுவது நம் சிந்தனைக்குஉரியதாகிறது. அதாவது,  அறிவுரைகள்
கூறும் பதினைந்து பாடல்களில் நான்கு பாடல்கள் அந்தண வணக்கத்தைச்
சிறப்பித்துப் பாடுகின்றன.  அந்தணர்கள் என இங்குக் குறிப்பிடப்படுபவர்கள்
துறவிகளே;  எனினும்அவர்களைக் குறித்து இவ்வளவு மீயுயர்வாகக் கம்பன்
பாடுவது வெறும் வழிநூல் மரபாகத் தோன்றவில்லை. வான்மீகியின் காலத்தில்
முனிவர்களுக்கிருந்த செல்வாக்கை அவரே விதந்து போற்றாதிருக்கையில்
அத்தகைய முனிவர்கள் சமுதாயத்தே அருகிய காலத்திலிருந்த கம்பன்
முனிவர்களைப் போற்றுகிறானா, அந்தண அறி


10.    எழுவகைக் குற்றங்களாவன:  பிறன்மனை நயத்தல்,  சூது,  விதி மீறி
      வேட்டையாடுதல், மது,  வெள்ளைக் கோட்டி,  குற்றத்தை விஞ்சிய
      தண்டனை,  வீண்செலவு ஆகியன.