68

ஞர்களைப் போற்றுகிறானா என்பது சிந்தனைக்குரியதாக அமைகிறது.

     பார்ப்பார்க் கல்லது பணிபறியலையே               (பதிற்.63.1)

எனவும்,

     இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த
     நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே
            (புறம். 6.19.20)

எனவும் வரும் பண்டைய தமிழ் மரபு கம்பனுக்கு இவ்வகையில்
உதவியிருக்குமா என்பதும் ஆராய்தற்குரியது.கம்பனில் அறிவுரை கூறுவது
வசிட்டன் என்பதும் தன் காப்பிய அரங்கேற்றத்தின் போது கம்பன் பட்ட
இடர்களாகச் செவிவழிச் செய்தியால் அறியக் கிடப்பதும் இத்தொடர்பில்
இணைத்துச் சிந்திக்கப்படவேண்டியனவாய் உள்ளன.

1.3. மந்தரையால் கைகேயி மனம் திரிதல்
1.3.1. மந்தரை யார்?

     தாய் தகப்பன் இன்னாரெனவாவது எந்தவிடத்தில் பிறந்தாள் என்றாவது
அறியப்படாதவள் மந்தரை. கைகேயின் தகப்பனாரால் அனுப்பப்பட்டு
எப்போதும் கைகேயியுடன் இருப்பவள் என்பது
வான்மீகம் (II. 7.1-3). 
துந்துபி என்னும் காந்தருவப் பெண்ணே  மந்தரையாக அவதரித்தாள் என்று
மகாபாரதம் (வனபர்வம்.  277)  கூறுகிறது.11 பிறர்க்கு இடுக்கண்
தருவதையே இயற்கையாகக்கொண்ட இராவணன் இழைத்த தீமையே
உருக்கொண்டாற் போன்று கூனி தோன்றினாள் என்பது
கம்பராமாயணம்
(II. 2.47). 
பத்ம புராணத்தின்படி தேவர்கள் தங்கள் அப்சர மகளிருள்
ஒருத்தியை மந்தரையாக நிலவுலகில் அவதரிக்குமாறு செய்தனர். மகாபலிச்
சக்கரவர்த்தியின் தந்தையாகியவிரோசனன் மகள் மந்தரை தன் சரீரத்தில்
திரிகோணமுடைய காரணத்தைக் கொண்டு கூனியென்று காரணப்பெயர் 
பெற்றுக் கைகேயின் அரண்மனையில் வசிக்கிறாள் என்று
அத்யாத்ம
ராமாயணம்கூறுகிறது.12

     இராமனைக் காட்டிற்கு அனுப்பி இராவண வதம் செய்யும்
நோக்கத்துடன் திருமாலின் ஆணையின்படிமாயை மந்தரையாக


11.   A.N. Jani, "Different versions of Valmiki's Ramayana, in
     sanskrit"
Asisan Variations in RamayanaP.30
12.   நடேச சாஸ்திரியார்,  ப. 59.