அவதாரம் எடுத்துத் தசரதன் அரண்மனையை அடைந்தாள் என்றும் (பாலகாண்டம் சந்தி - 8) அரசவையில் பணிப் பெண்ணாக இருந்த மாயையாகிய மந்தரை இராமன் நாளை முடிசூடுவான் என்று தசரதன் அறிவித்ததைக் கேட்டு கைகேயின் அரண்மனை நோக்கி ஓடினாள் (அயோத்யா சந்தி. 1) என்றும்கன்னட தொரவேராமாயணம் கூறுகிறது. தசரதன் தன் ராஜ்யத்தின் மூன்று திக்கு நாடுகளையும் மூன்று மக்களுக்குச் சமமாகப் பங்கிட்டுக்கொடுத்தபின் தலைநகரைச் சேர்ந்த நாட்டை இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யும்போது பிரம்மாவின் ஆணையால் மந்தரை என்னும் பெயருடைய ஒரு கந்தர்வப் பெண் கைகேயியை அடைந்துஇருவரங்கள் கேட்குமாறு தூண்டினாள் என்று கோவிந்த ராமாயணம் கூறுகிறது.13 தொகுப்புரை மந்தரையின் ஊர், பெற்றோர் போன்ற விவரங்கள் யாருக்கும் தெரியாது; கேகயன் அரண்மனையில்தாதியாக இருந்து பின்னர்க் கைகேயியின் துணையாக அயோத்தி வந்தாள் என்று மூலநூல் கூறிவிடவே, பின்னர் வந்த வழிநூல்கள் எல்லாம் மந்தரை பிறப்பு வளர்ப்பு குறித்துப் பல்வேறு கற்பனை வரலாறுகளைத்தத்தம் காப்பிய நோக்கத்துக் கேற்பப் படைத்துக் காட்டுகின்றன. மகாபாரதம், பத்மபுராணம், அத்யாத்ம ராமாயணம், தொரவெ ராமாயணம், கோவிந்தராமாயணம் ஆகியன மந்தரையை அவதாரப் பிறப்பாகக் கூறுகின்றன. அவதாரம் என்பது தீமைகளை ஒழிக்கஉயர்ந்தோர் மேற்கொள்ளும் பிறப்பு வேறுபாடு என்பது பொதுவான கருத்து. இங்கு மந்தரையின் சூழ்ச்சிஇராமன் முடிசூடலைத் தடுத்துக் காட்டிற்கு ஓட்டுதல் என்னும் தீமையில் முடிதலின், மந்தரையை அவதாரப்பிறப்பென்றல் பொருந்துமா என்னும் வினா எழுகிறது. எனினும், மந்தரையின் சூழ்ச்சியால் விளையும் இராம வனவாசம் இராவணவதம் என்னும் பெருநன்மையில் முடிவதால் மந்தரையும் அவதாரப் பிறப்பினள்என்று கொள்வதில் பெருந்தவறு எதுவும் இல்லை. மானுடப் பார்வையும் மீமானுடப் பார்வையும் கலந்துநிற்கும் காரணத்தால் இத்தகைய கருத்துக் குழப்பம் ஏற்பட ஏதுவாயிற்று எனலாம். இதனால்தான் கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பன் மந்தரையை அவதாரமாகக் காட்டாமல் இராவணனின்தீமையே உருக்கொண்
13. ஓங்கார கைல, பிரதி 74 |