71

அக்கினி புராணம்

     மந்தரைக்கு இழைத்த அநீதி அல்லது அன்பற்ற  கொடுமை ஒன்றின்
காரணமாக  இராமன் காட்டுக்குப்போக நேர்ந்தது.14

கம்ப ராமாயணம்

     கொடுமனக்  கூனி  (II. 2.47)  இடுக்கண்  மூட்டுவாள்  (48), 
காலக்கோள் அனாள் (51),  தீய மந்தரை (85), வினை நிரம்பிய கூனி  (87), 
உள்ளமும் கோடிய கொடியாள் (89),

    பண்டை நாள் இராகவன் பாணி வில் உமிழ்
    உண்டை உண்டதனைத் தன்னுள்ளத்து உள்ளுவாள்.     (II. 2.49)


    சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல் மற்றிந்
    நெறியிகழ்ந்து யான் ஓர் தீமை இழைத்தலால் உணர்ச்சி நீண்டு
    சிறியதாம் மேனியாய கூனியால் குவவுத் தோளாய்
    வெறியன எய்தி நொய்தின் வெந்துயர்க் கடலின் வீழ்ந்தேன்.
                                                (IV. 8.12)


    ....அன்னான் அந்தக் கூனி கூன்போக உண்டை தெறித்த
    போது  ஒத்தன்றி சினம் உண்மை தெரிந்ததில்லை.    (VI. 1.17)

தக்கை ராமாயணம்

    கொடியான் அரக்கன்செய் வினைப்பயனால்
    கூனி அதுகண்டு கோபமுற்றாள்
    நெடியோன் சிறுபோதில் தெறித்த உண்டை
    நெஞ்சில் சுடக் கைகை இடத்திற் சென்றாள்.           (II. 2.8)

இராம நாடகம்:  பாதுகா பட்டாபிஷேகம்

     அவனுக்கு (இராமனுக்கு) அரச காரியங்கள் என்ன தெரியும்?  
என்னைப்போல்  ஒரு கூன் விழுந்தகிழவியகப்பட்டால் அவளை
வில்லுண்டையால் அடித்துப் பரிகசிக்கத் தெரியும்.  அவன்
வில்லாண்மைகளெல்லாம்பெண்களிடத்தில்தான்:  தாதியாகிய என்னை
வில்லாலடித்தான்;  தாடகை என்னும் ஒரு பெண்ணைவில் வளைத்து
அம்பெய்து கொன்றான்;  சிவன் தனக்கு உபயோகமில்லையென்று


14.  A.N.  Jani,  P. 32