எறிந்த சொத்தை வில்லைப் பக்குவமாய் வளைக்கத் தெரியாமல் முறித்தெறிந்தான்... இவனுக்குப் பட்டம் ஒரு கேடா? (I. 3. 26) புசுண்டி ராமாயணம் தேவர்களின் வேண்டுகோளால் சரஸ்வதி மந்தரையின் மனத்துள் புகுந்து இராமனைக் காட்டிற்குஅனுப்புமாறு கைகேயியைத் தூண்டுகிறாள்.15 அத்யாத்ம ராமாயணம் சரஸ்வதி தேவி யிப்போதே அயோத்திக்குச் சென்று, அவள் மனதில் பிரவேசித்து அவளைக்கொண்டு கைகேயி தேவிக்குப் போதிக்கச் செய்து, கைகேயியிடத்திலும் அந்தரியாமியாக வசித்து. இராமனைப் பதினான்கு வருடம் காட்டுக்குச் செல்லும்படிக்கும், பரதன் பதினான்கு வருடம் நாடாளும்படிக்கும்செய்விக்க வேண்டும், என்று கூறி, கலைவாணியை நோக்கி, "தாயே! தற்காலம் எங்களைக்காப்பாற்றி யருளவேண்டும்", என்று கதறிப் பிரம்மாவையும் சரஸ்வதியையும் வேண்டிக் கொண்டனர்.(ப.59) அசாமி ராமாயணம் பரதன் தன் தாய்மாமன் வீட்டிலிருந்து திரும்பி வருகிறான் என்ற செய்தியைக் கேட்டதும், அவனைக் கண்டு தன் காதலுணர்வை வெளிப்படுத்தக் கருதிய கூனியாகிய குஞ்சி முப்பது வகையானநகைகளையும் மணமிக்க பொருள்களையும் தன்மீது அணிந்துகொண்டு அவனைச் சந்திக்க ஓடுகிறாள். அப்போது, "நான் பரதனைவிட மூத்தவள்; எனினும் அதனாலென்ன? வயது வேறுபாடு காதலர்களுக்கு ஒருதடையா என்ன? வெளிப்படையாக என்னைக் காதலியாக ஏற்றுக் கொள்ளப் பரதன் வெட்கப்படலாம். இருந்தாலும் பிறரறியாதவாறு நான் அவனுக்கு ஆசை நாயகியாக இருப்பேன்" என்றவாறு சிந்தனை செய்துகொண்டுபரதனை நோக்கிக் குஞ்சி விரைகிறாள்.16 ரங்கநாத ராமாயணம் இராமன் சிறிய பையனாக இருந்தபோது தன்காலை ஒடித்து விட்டான் என்ற காரணத்தால் மந்தரைஅவள் மீது பகைமை கொண்டிருந்தாள்.
15. Bhagwati Prasad Singh, "Bhusundi Ramayana and its influence on themedieval Ramayana Literature," The Ramayana Tradition in Asia. pp. 500- 501. 16. Biswanarayan, shastri, "Ramayana in Assamese Literature," The RamayanaTradition in Asia,p. 587 |