73

பாஸ்கர ராமாயணம்

     இதுவும் மேற்கண்டவாறே கூறுகிறது.

தொரவெ ராமாயணம்

     திருமாலின் ஆணையால் மந்தரையாக அவதரித்த மாயை அவனது
அவதார நோக்கம் கருதி இராமனுக்குஎதிராகச் செயற்படுகிறாள்.

எழுத்தச்சன் ராமாயணம்

     தேவர்களின் வேண்டுகோளின்படி சரஸ்வதியால் மனம் திரிந்த மந்தரை
இராமன் முடி சூடாதவாறுதடுக்கக் கருதிக் கைகேயியைத் தூண்டுகிறாள்.

துளசி ராமாயணம்

     சரஸ்வதி தேவியின் தூண்டலால் மந்தரை சிந்தை திரிந்தவளாய்க்
கைகேயியை  இராமனுக்குஎதிராகத் தூண்டுகிறாள்.    (II. 13)

இராம்கியேன்

     இராமன் மீது கொண்டிருந்த பழம்பகை காரணமாக மந்தரையாகிய
கூனி (குசி) கைகேயியிடம் சென்றுஇராம பட்டாபிஷேகத்தைத் தடுக்குமாறு
தூண்டுகிறாள் (ப. 34)

இராம வத்து

     இயற்கையிலேயே தீய எண்ணமும் அழுக்காறும் கொண்ட கூனி 
(குப்பசி)  கைகேயியை இராமனுக்குஎதிராகச் செயல்படுமாறு தூண்டுகிறாள் 
(5ஆவது காண்டம்)

தொகுப்புரை

     இராமகாதையின் கதைக் கருவிற்கு அயோத்தியா காண்டம் ஒரு
திருப்புமுனையாக அமைகிறது எனின்அத் திருப்புமுனைக்குக்
காரணகர்த்தாவாக விளங்குபவள் மந்தரையாகிய கூனிதான் என்பது தெளிவு.
இக்கூனிஇராமன் மீது பகைமை பாராட்டியமைக்குரிய காரணங்களாக
இராமாயண நூல்கள் கூறுவனவற்றைத் தொகுத்துநோக்கின் நான்கு வகைக்
காரணங்கள் புலப்படுகின்றன.  அவையாவன:

    1.    மந்தரையின் இயற்கைப் பண்புகள்
    2.    இராமன் சிறுவனாக இருந்தபோது கூனிக்கு இழைத்த
          பிள்ளைமைக் குறும்புகள்.