74

    3.   தேவர்களின் தூண்டலால் மனந்திரிந்து இராமனுக்கு எதிராகச்
          செயற்படுதல்.
    4.   பரதன்மீது ஏற்பட்ட காதலால் இராமனுக்கு எதிராகச் செயற்படுதல்.

     1.    இவற்றுள் முதற் காரணத்தை ஆதி காவியமாகிய வான்மீகம்
குறிப்பாகச் சுட்டுகிறது. 'பாபதர்ஷினி'  'வாக்கிய விஷாரதா' என்னும்
அடைமொழிகளும்,  மாயைகளில் வல்லவள்,  முதலைபோன்ற 
இயல்புடையவள் என்னும் குறிப்புகளும் அவளுடைய மானுட இயற்கையே
செப்பமற்றது;  பிறர்க்குத்தீங்கு நினைக்கும் தன்மையது என்னும் குறிப்பை
நமக்குத் தருகின்றன. எனவே,  தன் தலைவியாகிய கைகேயியின்நலனுக்கு
எதிரானது என்று தான் கருதுவதைத் தடுக்கும் இயல்பினள் மந்தரை என்பது
பெறப்படுகிறது. இவ்வாறு மந்தரையின் இயற்கைப் பண்புகளே இராமனுக்கு
இடையூறு நினைக்கக் காரணமாயின என்னும்கருத்தினராக வான்மீகி
காணப்படுகிறார்.

     கி.பி. 17ஆம்  நூற்றாண்டில் தோன்றிய இராமவத்து என்னும் பர்மிய
ராமாயணமும் கூனியின்இயற்கைப் பண்புகளை அவளுடைய பகைமைக்குக்
காரணமாய்க் காட்டுகிறது.

     2.    கூனிக்கு இராமன் இழைத்த தீங்குகளால் அவள் இராமன் மீது
பகைமை பாராட்டினாள் என்னும்செய்தியை முதன்முதலாக அக்கினி
புராணம் (கி.பி.8 ஆம் நூற்றாண்டின்பின்) கூறுகிறது. ஆனால், என்ன தீங்கு
இழைத்தான் என்று அது விளக்கவில்லை.  காப்பியக் கவிஞர்களில்
கம்பன்தான் முதன்முதலாக  இக் காரணத்தை விளக்குகிறான்.  பண்டைய
நாளில் தன் வில்லுண்டையால் அடித்துக் கூனியைஇகழ்ந்த காரணத்தால்
மந்தரை பகைமை கொண்டாள் என்பதைக் கம்பன் தன் கூற்றாகவும் இராமன்
கூற்றாகவும் கூறுகிறான்.  இக் கருத்தைக் கம்பன்,

    தேனகம் செய் தண்ணறு மலர்த்துழாய் நன்மாலையாய்
    கூனகம் புகத்தெறித்த கொற்றவில்லி அல்லையே.
                                  (திருச்சந்த விருத்தம் 30)

    கொண்டை கொண்ட கோதைமீது தேனுலாவு கூனி கூன்
    உண்டை கொண்டு அரங்கவோட்டி உள்மகிழ்ந்த நாதன்.

                                  
(திருச்சந்த விருத்தம் 49)

எனவரும் திருமழிசையாழ்வாரின் பாசுரங்களிலிருந்து பெற்றிருக்கலாம் எனக்
கருத வாய்ப்புண்டு. ஆழ்வார்கருத்துக்கு எது மூலம் என்று அறிய
இயலவில்லை.  ஒருகால் அவரே கற்பித்துப் பாடி