யிருக்கலாம். தக்கை ராமாயணம், கம்பனைப் பின்பற்றி இதே காரணத்தைக் கூறுகிறது. பெரும்பாலும் வான்மீகத்தைத் தழுவிச் செல்லும் இராம நாடகம்கூட இந்தச் செய்தியில் கம்பனைப் பின்பற்றிச் செல்லக் காண்கிறோம். தெலுகு ராமாயணமாகிய ரங்கநாத ராமாயணம் 'இராமன் சிறுவனாயிருந்தபோது விளையாட்டாகக்கூனியின் காலை ஒடித்து விட்டான். அந்தக் கோபத்தால் மந்தரை அவன்மீது வஞ்சம் கொண்டாள்' என்று கூறி இதே காரணத்தைக் காட்டுகிறது. இச் செய்தியைப் பின் வந்த பாஸ்கர ராமாயணமும்கூறுகிறது. ரங்கநாத ராமாயணக் கூற்றிற்கு மூலம் எதுவென அறிய இயலவில்லை. இனி, தாய்லாந்துராமாயணமாகிய இராம்கியேன், மந்தரை இராமன் மீது பழம்பகை கொண்டிருந்தாள் என்று கூறுகிறது. இன்னதென விரித்துரைக்க வில்லையேனும் பழம்பகைமை என்னும் காரணத்தை இக்காப்பியம் சுட்டுகிறதுஎன்பது தெளிவாகிறது. 3. தேவர்களின் வேண்டுகோளால் சரஸ்வதி நிலவுலகிற்கு வந்து மந்தரையின் மனதில் புகுந்துகைகேயியின் உள்ளத்தைத் திரித்து இராமனுக்கு எதிராகச் செயல்படச் செய்தாள் என்னும் கருத்தை முதன்முதலில் புசுண்டி 'Bhusundi' ராமாயணம் கூறுகிறது. வடநாட்டைப் பொறுத்தவரை வான்மீகத்தைஅடுத்துத் தோன்றிய (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு) இந்நூலின் தாக்கத்தை இடைக்கால இராமாயணநூல்கள் பலவற்றிலும் காணலாம். புசுண்டி ராமாயணத்தைப் பின்பற்றி அத்யாத்ம ராமாயணம், துளசி ராமாயணம் ஆகிய இரண்டும் இதே கருத்தைக் கூறுகின்றன. கன்னட தொரவே ராமாயணம் இதனைச்சற்று மாற்றித், திருமாலின் ஆணையால் மாயையே மந்தரையாக அவதரித்து அவதாரப் பயன்கருதிக் கைகேயியின் மனத்தை இராமனுக்கு எதிராக மாற்றினாள் என்று கூறுகிறது. மாயையின் அவதாரம் எனக்கூறினமையால் கேகயன் அரண்மனைக்கே வந்து பணிப்பெண்ணாக அமர்ந்தாள் என்று சற்று மாற்றிக் கூறுகிறது. மந்தரை இயற்கையில் குற்றமற்றவள், தேவர்கள் தங்கள் காரிய சித்திக்காக அவளைத்திரித்துப் பணி கொண்டனர் என்பது இக்கருத்தின் அடிப்படையாக அமைகிறது. 4. மாதவ் கந்தலியின் அசாமி ராமாயணம் பரதன் மீது காதல் வயப்பட்டவளாக மந்தரையைக்காட்டுகிறது. இதனால் பரதனின் நலனில் மிக்க ஆர்வமுடையவளாகி, இராமனுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பட்டாபிஷேகத்தைப் பரதனுக்குச் செய்ய வேண்டும் என்னும் கருத்தில் கைகேயியின் மனத்தை இராமனுக்குஎதிராக மாற்றுகிறாள். இங்கே பழம் பகைமையோ, அவதார |