92

இராமன் கூற்றாகத் துளசிதாசர் இவ்வாறு கூறிய பின்னர்க் கவிக்
கூற்றாக,உடன் பிறந்தோருக்காக இரங்கி வருந்தும் இராமபிரானின்
இக்கூற்று பக்தர்களின் உள்ளத்தே வஞ்சகஎண்ணத்தை
அகற்றிவிடும்36

என்று கூறுகிறார்.

     தெலுகு ராமாயணங்கள் இச்சூழலை வருணிக்குமிடத்து வான்மீகியைப்
பின்பற்றிச் செல்கின்றன.எழுத்தச்சன் ராமாயணம், அத்யாத்ம
ராமாயணத்தையும், பிற காஷ்மீர, வங்காளி இராமாயணங்கள்துளசியையும்
பின்பற்றிச் செல்கின்றன.

தொகுப்புரை

     பட்டாபிடேகச் செய்தியைக் கேட்ட வான்மீக இராமன் எதுவும்
சொல்லாது திரும்புகிறான்.அப்போதைய அவன் மனநிலை குறித்து வால்மீகி
எதுவும் கூறவில்லை. அரசனாகெனத் தசரதன் கூறியதும்அரசின்பால்
விருப்பு வெறுப்பின்றி அரசன் ஆணையாதலின் ஏற்க வேண்டியதாயிற்று என
இராமன் கருதியதாகக்கம்பன் தன் கூற்றாகக் கூறுகிறான். வான்மீக 
இராமனின் மௌன ஏற்புக்குக் கம்பன் காரணம் காட்டிவிளக்குகிறான் எனத்
தோற்றுகிறது.

     அத்யாத்மம் காட்டும் இராமனும் ஏறக்குறைய இதே மனநிலை
யுடையவனாகக் காட்டப்படினும், இலக்குவனைநோக்கிப் புன்முறுவல்
பூக்கும்  குறிப்பு சற்றுச் சிந்திக்கத் தக்கது. மேலும் பட்டாபிஷேகம் 
நடக்கப்போகிறதாம் என்னும் ஆர்வமற்ற,  ‘நடக்கும் என்று நம்புகிறார்கள்’ 
என்னும் இகழ்ச்சிக்குறிப்பும்  இதில் தொனிக்கக்  காண்கிறோம்.  இனி
"நான் வெறும் கருவி, இதன் பயனை நுகரப்போகிறவன், ‘நீதான்"  என்று 
இலக்குவனிடம் கூறுமிடத்து, ‘இது நடக்கப்போவதில்லை; இதனால் விளையும்
பயனை நீதான் அனுபவிக்கப்போகிறாய்’ என்னும் குறிப்பும் அடங்கி நிற்கக்
காண்கிறோம். வான்மீகியின் மௌனத்தைக் கம்பன் விளக்கியது போல், 
அத்யாத்மத்தை  அடியொற்றிச் செல்லும்துளசிதாசர் இக்குறிப்பால்
பெறப்படும் கருத்தை விரிவுபடுத்தி இராமனின் விருப்பின்மையையும் 
வருத்தத்தையும் வெளிப்படுத்திக் காட்டுகிறார். அரசன் கட்டளையை மறுக்க
வொண்ணாமையின், இராமன் ஏற்க நினைந்தான்; எனவே இராமன் வஞ்சக
எண்ணம்


36.   அன்ஜனினன்தன்சரனம், 10-4-8