93

இல்லாதவன் என்று வாசகர்களும்  பக்தர்களும்  உணர்வார்களாக என
உணர்த்துவது  துளசியின் உட்கிடக்கையாகத் தோன்றுகிறது.

     வான்மீகியும் கம்பனும் படைத்த இராமன்,  அரசை ஏற்பதில்
வேண்டுதல் வேண்டாமை அற்றவனாய்க்கடமை உணர்ச்சியால்
கட்டுப்பட்டவனாகக் காணப்படுகிறான்.  அத்யாமத்தில் குறிப்பாக
விருப்பமின்மையைக்காட்டிய இராமன், துளசியில் விருப்பின்மையை
வெளிப்படையாகவே காட்டி,  நிகழ்ச்சியின் தகவின்மையையும்
வெளிப்படுத்தித் தன்னால் அதைத் தடுக்க இயலாமைக்கு வருந்தவும்
செய்கிறான்.

2.2  கைகேயியின் கட்டளையும் இராமனின் மனநிலையும்

வான்மீகம்

     பட்டாபிடேகத் தினத்தன்று காலையில் சுமந்திரனால் அழைக்கப்பட்ட
இராமன் சீதையிடம் கைகேயியின்நல்ல பண்புகளைப் புகழ்ந்து கூறியவனாய்
இலக்குவனுடன் அரண்மனையை அடைந்தான்.  அங்கே தசரதன்,கைகேயி,
அமைச்சர் முதலானோர் குழுமியிருந்தனர்.  தசரதன் தன்னை வரவேற்காது 
உணர்வு மழுங்கியநிலையில் இருக்கக் கண்ட இராமன் கைகேயியை
நோக்கியபோது அவள்,  "இராம,  அரசர் பேசும் நிலையில்இல்லை. 
முன்பொருகால் அவர் எனக்கு அளித்திருந்த இருவரங்களை நான் இப்போது
கேட்டேன்.  அதனால்வருத்தமடைந்தவராக  உள்ளார்.  நான் கேட்ட
வரங்களின்படி நீ தண்ட காரணியம் சென்று 14 ஆண்டுகள்துறவியாய்
வாழவேண்டும். உனக்காக ஏற்பாடு செய்யப்பெற்ற இளவரசுப் பட்டத்தை
என் மகன் பரதனுக்குஅளிக்க வேண்டும்.  இதை உன்னிடம் கூற முடியாமல்
உன் தந்தை வருந்துகிறார். அரசனின் ஆணையை ஏற்றுநடப்பது உனக்கு
அழகு. நீ ஏற்று நடக்கும் வரை அரசர் உண்ணவும், உடுத்தவும் செய்யார்" 
என்றுகூறுகிறான்.  (II. 18.28 - 41)

     இதனைக் கேட்ட இராமன் சிறிதும் மனக் கலக்கமின்றிக் கைகேயியைப்
பார்த்து,  "தங்கள்திருவுள்ளப்படியே நடக்கட்டும்.  அரசன் ஆணையை
மேற்கொண்டு இதோ இங்கிருந்தே காட்டிற்குச் செல்கிறேன். பரதன் மிகவும்
நல்லவன்.  அவனுக்காக நான் எதையும் தருவேன்.  உங்கள் மனோதரம் 
நிறைவேறும், நீங்கள் கவலைப்படவேண்டாம். பரதனை அழைத்து  வரச்
சீக்கிரம் தூதர்களை அனுப்புங்கள்.  ஆனால், மன்னர் ஏன் என்னோடு
பேசவில்லை? எனக்கு ஏன் அவர் ஆணையிடவில்லை? நான் என்ன தவறு
செய்தேன்?அவர் என்னுடன் பேசாததுதான் என் மனக்குறை. அரசனால்
கட்டளை பெறாதவனாக இருப்பினும்