94

உங்கள் ஆணையின்படியே காட்டிற்குப் போவேன். கேகய  ராஜகுமாரியே,
எனக்கு நீங்களே  கட்டளையிட உரிமையிருந்தும், என்னிடம் பெருந்தன்மை
உண்டென்பதைக் கொஞ்சமேனும்  எதிர்பாராதிருந்து விட்டீர். அதனால்தான்
இச்சிறு காரியத்திற்காக அரசனை நீங்கள் வேண்டியுள்ளீர்.  என் தாயாரிடம்
விடை பெற்றுச்  சீதைக்குச் சமாதானம் சொல்லி இருக்கச் செய்துவிட்டு
உடனே இன்றைக்கே காட்டிற்குப் போகின்றேன்"  என்று கூறி மயங்கிய
நிலையில் இருந்த தசரதனையும்  கலக்கமின்றியிருந்த கைகேயியையும்
தொழுது வணங்கிவிட்டு  இலக்குவனுடன் வெளியேறினான். (II. 19.2-31)

     பட்டமிழப்பை ஒரு பொருட்டாக மதியாத இராமன் சிந்தனைக்
கலக்கமின்றி அங்கிருந்து வெளியேறினான். நிலவின் ஒளி போன்ற
முகமண்டலமுடையவனாய் மனதில் விகாரம் எதுவும் இன்றி ஒரு 
துறவியைப்போன்று,  தன் தாய்க்கு ஏற்படும் மனவருத்தத்தைச்
சிந்தித்தவனாய், குடை, கவதி,தேர், பரிவாரம் என்பனவற்றையெல்லாம்
விலக்கிவிட்டுத் தன் திருமாளிகை நோக்கி நடக்கலானான். (1, 19, 36-37)

     திருமுகமண்டலம் ஒளிகுறைந்தும் திருமேனி வியர்வையில் நனைந்தும்
தன் மாளிகையுட்  புகுந்தஇராமனைக் கண்ட சீதை துணுக்குற்றவளாய், 
"இராகவ,  பல சலாகைகளையுடையதாய்,  நீர் நுரைபோல்
வெண்ணிறமுடையதாய் இருக்கும் கொற்றக் குடையின்றி,  இரு
வெண்சாமரைகளின்றி வந்திப்பவர்கள், பரிவாரங்கள் இன்றி,  புனித நீரால்
நனையாத தலையையுடையவராய், தங்களுடைய புஷ்யரதம் என்னும்தேர்
இன்றிப் பட்டத்து யானையும் இன்றி, நானிதுவரை கண்டிராத
முகவாட்டத்துடன் தாங்கள்வருவதன் காரணமென்ன"  என்று வினவினாள்.
(II. 26.8-18)

     இலக்குவ, என்னை என் தந்தை கைவிட்டதுபோல் எந்த மூட மனிதன்
தன் இஷ்டப்படி  நடக்கும்புதல்வனை ஒரு ஸ்திரியின் பொருட்டுக்
கைவிடுவான்? கைகேயியின் புதல்வனான பரதன் கோசல நாட்டை  
மகாராஜாவைப் போல் தான் ஒருவனாய்ச் சுகமாக அனுபவிக்கப்
போகிறானே... எவன் தருமார்த்தங்களைக்கைவிட்டுக் காமத்தைப்
பற்றுகிறானோ அவன் தசரத மன்னரைப்  போல் விரைவில்
ஆபத்தையடைகிறான்.தசரதருடைய மரணத்