திற்கும் என்னைக் காட்டுக்கு ஓட்டுதற்கும் பரதனுக்கு அரசைக் கொடுப்பதற்குமே கைகேயி தோன்றினார் என்று எண்ணுகிறேன். செல்வச் செருக்கினால் மோகமடைந்த கைகேயி என் பொருட்டுக் கோசலையையும் சுமித்தி்ரையையும் வருத்தாதிருப்பாரோ? என் பொருட்டுச் சுமித்திரா தேவியார் துயரப்படவேண்டாம். நீ இங்கிருந்து அயோத்திக்குக் காலையிலேயே புறப்படு. நானும் சீதையும் மட்டும் தண்ட காரணியம் செல்கிறோம். அற்பத் தொழிலையுடைய கைகேயியார் பகைமையால் அநியாயம் செய்வாரன்றோ? ஆகையால், தருமத்தை யுணர்ந்தவனான பரதனிடத்தில் என்னுடைய தாயை அடைக்கலமாகக் கொடுப்பாய்.... இலக்குவனே கோபங் கொண்டுவிட்டால் நானொருவனே பாணங்களால் அயோத்தியையும் உலக முழுவதையும் ஆக்கிரமிப்பேன்; ஆயினும் தருமமல்லாத தொழிலில் பராக்கிரமத்தைச் சாதனமாகக் கொள்ளக் கூடாதன்றோ? (II.53, நடேச சாஸ்திரி, 228 - 29) கம்ப ராமாயணம் ‘பிள்ளையைக் கொணர்க’ என்ற கைகேயியின் ஏவலால் சுமந்திரன் வந்து அழைக்க அரண்மனைசென்ற இராமன் அரசனைத் தேடிக் கைகேயி கோயில்புக, ‘அரசன் வாய்திறந்து கூறான், நான் இது பகர்வென்’ என்று எண்ணிய கைகேயி தன்முன் வந்து பணிந்து நின்ற இராமனைக் கண்டு, ‘மைந்த, உன் தந்தை உனக்கு உரைப்பதோர் உரை உண்டு’ என்றாள். இதனைக் கேட்டதும் இராமன், எந்தையே ஏவ, நீரே உரைசெய இயைவதுண்டேல் உய்ந்தனன் அடியேன்... தந்தையும் தாயும் நீரே, தலைநின்றேன் பணிமின் (II.3.110) என்று பணிந்து விடையிறுத்தான். உடனே கைகேயி, "உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ 14 ஆண்டுகள்காட்டில் வாழ்ந்து திரும்பி வரவேண்டும் என்று அரசன் இயம்பினான்" என்றாள் கைகேயியின்ஆணையைக் கேட்டபோது இராமன் அடைந்த மனநிலையை, இப்பொழுது எம்மனோரால் இயம்புவதற்கு எளிதோ யாரும் செப்பருங் குணத்து இராமன் திருமுகச் செவ்விநோக்கின் ஒப்பதே முன்பு பின்பு; அவ்வாசகம் உணரக் கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா. தெருளுடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி இருளுடைய உலகம் தாங்கும் இன்னலுக்கு இளைந்து நின்றான் |