பதிகம்

 

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே யருளுகென் றாற்கவர்



61
உரை
62

         முடி கெழு வேந்தர் மூவர்க்கும் உரியது - இவ்வரலாறு தமிழ் நாட்டு முடியுடை வேந்தர் மூவர்க்கும் உரியதாகலின், அடிகள் நீரே அருளுக என்றாற்கு - அடிகள் நீரே அருளிச் செய்க என்று கூறிய சாத்தற்கு,

        கெழு வென்னுஞ் சாரியை "1லனவென வரூஉம் புள்ளி யிறுதி முன்' என்னுஞ் சூத்திரத்து 'அன்ன மரபின் மொழியிடைத் தோன்றி' என்பதனால் இகர வீற்றின் முன்னும் வந்தது. புகாரினும் மதுரையினும் வஞ்சியினும் நிகழ்ந்ததாகலின், மூவர்க்கு முரியது என்றார். அடிகள், அண்மைவிளி. அருளுக என்பதன் அகரந் தொக்கது. என்றாற்கு அடிகள் அருள என மேல் வந்தியையும்.

       அடியார்க்கு நல்லார் 'நீரே' என்பதிலுள்ள ஏகாரத்தை வினாப் பொருட்டாகக் கொண்டு, 'இச் செய்கின்ற காப்பியம் மூவேந்தர்க்கு முரிய தென்பதனால், ஏனையோரை இவர் புகழந்துரையாராகலின், யாம் காப்பியஞ் செய்யக் கடவே மென்பது கருதி, நீரே அருளு கென ஏகார வினாப்பொருண்மை தோன்ற இது கருதி இது சொன் னாற்கு, அவர் கருதிய பொருளிற்கு உடம்படாது சொல்லிற்கு உடம் படடா ரென்ப தாயிற்று' என்றுரைப்பது சிறப்புடைத்தன்று; என்னை? அடிகளின் மனத்தூய்மையைச் சாத்தனாரும், சாத்தனார் கருத்தை அடிகளும் அறிந்திலர் என்னும் குற்றம் பொருந்து மாச லின். 'மூவேந்தர் நாட்டினும் நிகழ்ந்த கதையாகலான் ஏனை இரு வேந்தரியல்பும், வேத்தியலும், பொதுவியலும் எல்லா முணர்ந்த நீரே அருள வேண்டும் என்று சாத்தன் சொல்ல' என்னும் அரும் பத வுரைகாரர் கருத்தே திட்பமுடைத்தாகும் என்க.

       இனித் தாம் வகுத்துக் கொண்டதனைக் கூறுவார்.

1. தொல். எழுத் சூ. 481.