மூலம்
பதிகம்
65
மனையறம் படுத்த காதையும் நடம்நவில்
மங்கை மாதவி அரங்கேற்று காதையும்
64
உரை
65
நடம் நவில் மங்கை மாதவி அரங்கேற்று காதையும் - ஐயாண்டில் தண்டியம் பிடித்து ஏழாண்டு நடம் பயின்ற மாதவி மங்கைப் பருவத்தே அரங்கேற்றின காதையும்,
தண்டியம் - தண்டு; கோல்.