பதிகம்

70
மாதவி இரங்கிய காதையும் தீதுடைக்
கனாத்திற முரைத்த காதையும் வினாத்திறத்து


70
உரை
71

       தீது உடைக் கனாத்திறம் உரைத்த காதையும் - கண் ணகி தான் கண்ட தீங்கையுடைய கனாவின் திறத்தைத் தேவந் திக்கு உரைத்த காதையும்,

கனா நிலை யுரைத்தற் பொருண் முடிபினைக் கூறுதலின் இது காதையாயிற் றென்பர் அடியார்க்கு நல்லார்.