பதிகம்


கனாத்திற முரைத்த காதையும் வினாத்திறத்து
நாடுகாண் காதையும் காடுகாண் காதையும்


71
உரை
72

       வினாத்திறத்து நாடுகாண் காதையும் - கவுந்தியடிகள் வினாவின் திறத்தையுடைய சோணாட்டின் வளத்தை அவர்கள் கண்ட காதையும்,

      கண்ணகி மதுரை மூதூர் யாதென வினாவின திறம் எனலும் பொருந்தும்.

      நாடு - மருத வளஞ் சான்றது.

      காடுகாண் காதையும் - அங்ஙனம் நாட்டினைக் கண்டு இன்புற்றவர் காட்டினைக் கண்டு துன்புற்ற காதையும்,

      காடு - பாலை நிலமாயது.