|
15
20 |
ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்ப்
பேராச் சிறப்பின் புகார்நக ரத்துக்
கோவல னென்பானோர் வாணிகன் அவ்வூர்
நாடக மேத்தும் நாடகக் கணிகையொடு
ஆடிய கொள்கையின் அரும்பொருள் கேடுறக்
கண்ணகி யென்பாள் மனைவி அவள்கால்
பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டிப்
பாடல் சால் சிறப்பின் பாண்டியன் பெருஞ்சீர்
மாட மதுரை புகுந்தனன் அதுகொண்டு
|
|
ஆரங்
கண்ணி - ஆத்தி மாலையை யுடைய, சோழன் - செம்பியனது, மூதூர் - பழைய நகரங்களுள்ளே,
பேராச் சிறப்பின் - நீங்காத சிறப்பினையுடைய, புகார் நகரத்து - புகார் என்னும் நகரத்திடத்து,
கோவலன் என்பான் ஓர் வாணிகன் - கோவலன் என்று பெயர் கூறப்படுவானாகிய ஒரு வாணிகன்,
அவ்வூர் - அப் பதியின்கண், நாடகம் ஏத்தும் - நாடகத்தின் பொருட்டு யாவரும் கொண்டாடும்,
நாடகக் கணிகையொடு - நாடகப் பொதுமகளாகிய மாதவி யென்பாளோடு, ஆடிய கொள்கையின்
- கூடி யொழுகிய ஒழுக்கத்தால், அரும் பொருள் கேடு உற - பெறுதற்கரிய பொருள் தொலைதலின்,
கண்ணகி என்பாள் மனைவி - கண்ணகி யென்று பெயர் கூறப்படும் அவன் மனைவியோடும், அவள்
கால் பண் அமை சிலம்பு - அவளது காலணியாகிய ஓசை யமைந்த சிலம்பினை, பகர்தல் வேண்டி
- விற்றலைக் கருதி, பாடல் சால் சிறப்பின் - பாடுதல் அமைந்த சிறப்பினையுடைய, பாண்டியன்
பெருஞ்சீர் மாட மதுரை - பாண்டியனது மிக்க புகழையுடைய மாட மதுரைக்கண்ணே, புகுந்தனன் -
சென்று புக்கான்;
'ஆரங்கண்ணி' என்பதில் ஆர் அம்முச்சாரியை
பெற்றது; இதனை,
1"ஆரும்
வெதிரும் சாரும் பீரும் மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும்."
என்னும் சூத்திரத்து 'மெய்பெற' என்னும் இலேசான் அமைத்தார் நச்சினார்க்கினியர்.
2.
"ஆரங் கண்ணி யடுபோர்ச் சோழர்"
என்பதுங் காண்க. மூதூராகிய புகார் என்னலுமாம். புகார் - ஆற்று முகம்;
3.
"புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்"
என்பதன் உரை காண்க. காவிரி கடலொடு கலக்கு மிடத்துள்ள தாகலின் காவிரிப்பூம்பட்டினம்
புகார் எனப்பட்டது. அரும் பொருள் - அளத்தற்கரிய பொருள் என்றும், அறனும் இன்பமும்
பயக்கும் பொருள் என்றும் கூறுதலுமாம். சிறப்பினையுடைய மதுரை யென்க; பாண்டியற்கு அடையாக்கலுமாம்.
மாடம் என் னும் அடையடுத்து 'மாடமதுரை' எனப் பலவிடத்தும் வழங்குவது காணப்படும். நாடகம்,
மனைவி என்பவற்றில் முறையே குவ்வுருபும், ஒடுவுருபும் தொக்கன.
நகரத்து வாணிகன் ஆடிய கொள்கையாற்
கேடுறுதலின் சிலம்பு பகர்தல் வேண்டி மனைவியொடு மதுரை புகுந்தனன் என்க.
[அடி. நாடகமேத்து மென்றது நாடகந்தான்
இவளாற் சிறப்பெய்து தலின் ஏத்திற்றென்றவாறு.
காற்சிலம்பு பகர்தல் வேண்டி யெனவே
தலைக்கோலம் முதலிய அணிகளனைத் தும் முன்னமே தொலைந்தது விளங்கிநின்றது. காற்சிலம்பு
பகர்தல் வேண்டி யெனவே தலைக்கோலம் முதலிய அணிகளனைத் தும் முன்னமே தொலைந்தது விளங்கிநின்றது.
சிறப்பிற் பாண்டியன் என்றும், பெருஞ்சீர்
மாட மதுரை யென்றும் அடிகள் புகழ்ந்தார்; இவையும் பழவினையாள் அழிந்த வென்னும் இரக்கந்
தோன்ற. மாட மதுரை புகுந்தனன் என்பது, காட்டினன்றி ஓரூரின்கண் உயிரும் பொருளும் இழந்தா
னென்பது மேல் விளையத் தோன்றி நின்றது.]
|
1.
தொல். எழுத். 363. 2.
அகம். 93. 3. புறம். 30.
|
|