மூலம்
பதிகம்
75
ஊர்காண் காதையும் சீர்சால் நங்கை
அடைக்கலக் காதையும் கொலைக்களக் காதையும்
75
உரை
76
சீர்சால் நங்கை அடைக்கலக் காதையும் - புகழ் மிக்க கண்ணகியாகிய நங்கையை மாதரிபாற் கவுந்தியடிகள் அடைக்கலங் கொடுத்த காதையும்,
கொலைக்களக் காதையும் - கோவலன் கொலைக்களப் பட்ட காதையும்,