|
|
துன்ப மாலையும் நண்பகல்
நடுங்கிய
ஊர்சூழ் வரியும் சீர்சால் வேந்தனொடு |
|
நண்பகல் நடுங்கிய ஊர் சூழ் வரியும் - நண்பகற் பொழுதில் எல்லாருங் கண்டு நடுங்குமாறு
கண்ணகி ஊரினைச் சூழ்வந்த ஊர் சூழ் வரியும்,
நடுங்கிய, செய்யிய வென்னும் எச்சம்;
கண்ணகி நடுங்கிய என்று மாம். கண்ணகி நாணிறந்து வெளிப்பட்டு ஊர் சூழ வருவதனைப் பத்தினிப்
பெண்டிர் கண்கூடாகக் காண்டலின் இஃ ஊர் சூழ் வரியாயிற்று.
இதுவும் கூத்தாற் பெற்ற பெயரென்பர். |
|