|
80 |
ஊர்சூழ் வரியும் சீர்சால்
வேந்தனொடு
வழக்குரை காதையும் வஞ்சின மாலையும் |
|
சீர்சால்
வேந்தனொடு வழக்கு உரை காதையும் - புகழமைந்த பாண்டியனோடு கண்ணகி வழக்குரைத்த காதையும்,
உரை காதை - வினைத்தொகை ; இறந்த காலம்.
வஞ்சின மாலையும் - தானுரைத்த வழக்குந் தோற்று
உயிருந்தோற்ற நெடுஞ்செழியன் தேவியை நோக்கிக் கண்ணகி வஞ்சினங் கூறிய இயல்பும்,
மாலை - இயல்பு. |
|