|
20 |
மாட மதுரை புகுந்தனன் அதுகொண்டு
மன்பெரும் பீடிகை மறுகிற் செல்வோன்
பொன்செய் கொல்லன் றன்கைக் காட்டக்
|
|
அதுகொண்டு
- அங்ஙனம் புகுந்தவன் பிற்றை ஞான்று சிலம்பினை யெடுத்துக் கொண்டுமன் பெரும் பீடிகை
மறுகில் செல்வோன் - அதனை விற்பதற்காக மிக்க பெருமையினை யுடைய வணிகர் தெருவிற்
செல்கின்றவன், பொன் செய் கொல்ல ன்தன் கை காட்ட - எதிரே வந்த பொற்கொல்லனைக்
கண்டு அதனை அவன் கையிற் காட்ட
மன் - மிகுதிப் பொருட்டு 1"மன்னு
மாதர் பெருங் கற்பு" என்புழிப்போல. 'மன் கழிவின்கண் வந்தது' என அடியார்க்கு நல்லார்
கூறியது ஈண்டைக்குப் பொருந்துவதன்று. பொன் செய் - பொற் பணி செய்யும். தன், சாரியை.
கண்டு என ஒரு சொல் வருவிக்க.
[அடி. அதுகொண்டு என்றார் அச் சிலம்பால்
மேல் விளைவன தோன்ற; அது, அநியாயபுரத்தே புகுகின்றவன் கூற்றத்தையும் உடன்கொண்டு புக்கான்
என்றாற்போன் றிருந்தது.]
|
1.
சிலப். கானல். 3.
|
|