|
|
கட்டுரை காதையும் மட்டலர்
கோதையர
குன்றக் குரவையும் என்றிவை அனைத்துடன் |
|
மட்டு அலர் கோதையர் குன்றக் குரவையும் - மது வொழுக மலர்ந்த மாலையினையுடைய குறத்தியர்
வேங்கை நிழற் கண் அவளைக் கண்டதற்கு உற்பாத சாந்தியாக முருகவேளை நோக்கி அக் குன்றின்கண்
ஆடிய குரவையும்,
இதுவும் கூத்தாற் பெற்ற பெயர்.
'கோதை யென்று பாடங் கூறிக் கோதைக்கு அவர்களெடுத்த குரவை யெனினும் அமையும்' என்பர்
அடியார்க்கு நல்லார்.
என்று இவை அனைத்துடன் - என்று
சொல்லப்பட்ட இவ்விருபதது நான்குடனே, |
|