பதிகம்

85 வாழ்த்து வரந்தரு காதையொடு


85
உரை
85

     வாழ்த்து - பத்தினிக் கடவுள் செங்குட்டுவனை வாழ்த்தின காதையும்,

     வரம் தரு காதையொடு - அங்ஙனம் வாழ்த்திய கடவுள் செங்குட்டுவற்கும் அங்கு வந்திருந்த மன்ன ரனைவர்க்கும் வரங் கொடுத்த காதையும்,

     ஒடு, அசை ; எண்ணொடுவுமாம். தருதல் - கொடை ; இடவழு வமைதி.

     1
"காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று வகையிற் கல்லொடு."

     என்பதும், அதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையும் ஈண்டு அறியற்பாலன.


1. தொல். பொருள். சூ. 60.