பதிகம்





30

வினைவிளை காலம் ஆதலின் யாவதுஞ்
சினையலர் வேம்பன் தேரா னாகிக்
கன்றிய காவலர்க் கூஉய்அக் கள்வனைக்

கொன்றச் சிலம்பு கொண்ர்க ஈங்கெனக்



27
உரை
30

        வினை விளை காலம் ஆதலின் - தான் முற்பிறப்பிற் செய்த தீவினை வந்து பலிக்கின்ற காலம் ஆதலாலே, யாவதும் - யாதொன்றையும், சினைஅலர் வேம்பன் - முகை விரிந்த வேப்பம்பூ மாலையையுடைய பாண்டியன், தேரான் ஆகி - ஆராயாதவனாகி, கன்றிய காவலர்க் கூஉய் - அடிப்பட்ட காவலாளரை அழைத்து, அக் கள்வனைக் கொன்று - இவன் சொன்ன அக் கள்வனைக் கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு என - அச் சிலம்பை இப்பொழுதே கொணர்க என்று கூற,

       யாவதும் தேரானாகி என இயையும், கூஉய் - கூவி என்பதன் விகாரம். ஈங்கு - இப்பொழுதே யெனப் பொழுதினை யுணர்த் திற்று. உரைப்பக் கேட்ட வேம்பன் கொணர்க வென்று கூற என்க. அக்கள்வனைக் கொல்ல அச் சிலம்பையும் அவனையும் கொணர்கவெனச் சொல்லக் கருதினவன் வாய் சோர்ந்து, கொன்று அச் சிலம்பைக் கொண்டு வருக வென்று கூறினானென அடியார்க்கு நல்லார் கருதியது ஏற்புடைத்தன்று; என்னை? வினை விளை கால மாதலின் யாவதும் தேரானாகி என்றமையானும், அச் சிலம்பு எனத் தேவியின் சிலம்பைக் கருதிக் கூறினமையானும், வழக்குரைகாதை யுள்ளும் "கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று" என்றிறுத்தமை யானும் என்க.

       [அடி. இதனை ஆராயு நெறி பலவுளவாகவும், அவற்றில் ஒன்றையும் தேர்ந்தில னென்பார், யாவதும் தேரானாகி என்றார்; முன்னர்க் கை குறைத்தன் முத லிய முறை செய்தோன் இதனைத் தேர்ந்தில னென்று அடிகள் இரங்கிக் கூறினார்.

      கன்றிய காவலர் என்றார், அவரும் முன்னர்த் தீது செய்யா ரென்பது தோன்ற.]