|
35 |
கொலைக்களப் பட்ட கோவலன்
மனைவி
நிலைக்களங் காணாள் நெடுங்கணீர் உகுத்துப்
பத்தினி யாகலின் பாண்டியன் கேடுற
முத்தார மார்பின் முலைமுகந் திருகி
நிலைகெழு கூடல் நீளெரி ஊட்டிய
பலர்புகழ் பத்தினி யாகும் இவளென
|
|
கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி - அங்ஙனம் அரசன் கூறக் கேட்ட காவலாளரும் வினை
விளை கால மாதலின் அவனைக் கொல்லுதல்செய்யக் கொலை யிடத்தே பட்ட கோவலன் மனைவி,
நிலைக்களம் காணாள் - தனக்கு நிலை யிடம் காணாளாய், நெடு கண் நீர் உகுத்து - நெடிய
கண்ணின் நீரைச் சொரிந்து, பத்தினி ஆகலின் - ஆக்கவும் அழிக்கவும் வல்லள் ஆதலின்,
பாண்டியன் கேடு உற - பாண்டியன் உயிர் கெடுமாறு செய்து, முத்து ஆரம் மார்பின் முலை முகம்
திருகி -
முத்தாரம் அணிந்த மார்பினகத்து முலையின்முகத்தைத் திருகி யெறிந்து, நிலைகெழு கூடல்
நீள் எரி ஊட்டிய - அதினின் றும் உண்டாகிய நெடிய தீயால் நிலைபெற்ற மதுரையாகிய அவனூரையும்
உண்ணப் பண்ணிய, பலர் புகழ் பத்தினி ஆகும் இவள் என - பலரும் புகழும் பத்தினியாகும்
இக் குறவராற் சொல்லப்பெற்றவளென்று சாத்தன் கூற,
நிலைக்களம் காணாள் - ஓரிடத்து நிற்றலாற்றாளாய்
என்க. கேடுறச் செய்து என ஒரு சொல் விரித்துரைக்க; கேடுற உகுத்து என்றியைத்தலுமாம்.
எரியை உண்பித்த என விரித்தலும் பொருந்
தும். கண்ணின் நீராற் பாண்டியனை அடுதலும், முலையின் தீயாற் கூடலைச் சுடுதலுஞ் செய்தா
ளென்க.
"தொல்லை வினையால் துயருழந்தாள்
கண்ணினீர்
கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன்"
என வாழ்த்துக் காதையுள் உரைத்தலும் ஈண்டு அறியற்பாலது. |
|