பதிகம்




40





45





50

வினைவிளை வென்ன விறலோய் கேட்டி
அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்

கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்
வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்
1ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன்
மதுரைமா தெய்வம் வந்து தோன்றிக்
கொதியழற் சீற்றங் கொங்கையின் விளைத்தோய்

முதிர்வினை நுங்கட்கு முடிந்த தாகலின்
முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவனொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
சங்கம னென்னும் வாணிகன் மனைவ
இட்ட சாபங் கட்டிய தாகலின்

2வாரொலி கூந்தல்நின் மணமகன் றன்னை
ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவிற் காண்ட லில்லெனக்
கோட்டமில் கட்டுரை கேட்டனன் யானென



38
உரை
54

         விறலோய் கேட்டி - மேலோய் கேட்பாயாக; அதி ராச் சிறப்பின் மதுரை மூதூர்-நடுக்கமில்லாத சிறப்பினையுடைய மதுரையாகிய மூதூரிடத்துள்ள, கொன்றை அம் சடை முடி மன்றப் பொதியிலில் வெள்ளி அம்பலத்து - மன்றமாகிய பொதி யில்களில் கொன்றைமாலை யணிந்த சடைமுடியையுடைய இறைவனுறையும் வெள்ளியம்பலத்துள், நள் இருள் கிடந் தேன் - செறிந்த இருளையுடைய அரை யிரவில் துயின்றேனாக, ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன் - அப்பொழுது அரிய துன் பத்தை யுற்ற வீரபத்தினியின்முன், மதுரைமா தெய்வம் வந்து தோன்றி - அந்நகர்க்குக் காவற்றெய்வமாகிய மதுரைமா தெய் வம் வந்து வெளிப்பட்டு, கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய் - நினது மிக்க சினத்தால் வெவ்விய அழலை நின் கொங்கை யிடத்தே விளைவித்தோய், முதிர்வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின் - நுங்கட்கு முற்பட்ட நல்வினை தீர்ந்தது

         ஆகலான், முந்தைப் பிறப்பில் பைந்தொடி கணவனொடு - பசிய தொடியினையுடையாய் முற்பிறப்பில் நின் கணவனோடு நினக்கு, சிங்கா வண்புகழ்ச் சிங்கபுரத்து - கெடாத நல்ல புகழையுடைய கலிங்க நாட்டுச் சிங்கபுரம் என்னும் பதியின்கண், சங்கமன் என்னும் வாணிகன் மனைவி - சங்கமனென்னும் வணிகனுடைய மனைவியானவள், இட்ட சாபம் கட்டியது ஆகலின் - இட்ட சாபம் இப்பிறப்பில் வந்து மூண்டதாகலின், வார் ஒலி கூந்தல் - நீண்டு தழைத்த கூந்தலையுடையாய், நின் மணமகன் தன்னை - நின் கணவனை, ஈரேழ்நாள் அகத்து எல்லை நீங்கி - இன்றைக் குப் பதினாலாம் நாளில் பகற்பொழுது நீங்கியபின் காண்பை; வானோர் தங்கள் வடிவின் அல்லதை - காணுங்கால் வானோர் வடிவிற் காண்பதல்லது, ஈனோர் வடிவின் காண்டல் இல் என - மக்கள் வடிவிற் காண்பதில்லை யென்று கூற, கோட்டம் இல் கட்டுரை - வஞ்சமற்ற அக்கட்டுரையினை, கேட்டனன், யான் என - யான் கேட்டேனென்று சாத்தன் கூற,


         விறல் - பெருமை, கேட்டி, முன்னிலை யொருமை வினை எதிர் காலம் பற்றியது, அதிர்வு - நடுக்கம்;

         3 "அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும்"

என்றாராகலின். பகைவரால் நடுங்காத வென்க; அது,

         4 "நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லால் நேராதார் போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூரன்'

         என்பதனான் அறியப்படும். சடைமுடி - இறைவனுக்கு ஆகுபெயர். பொது இல்-பொதியில் என மரீஇயிற்று; இது 5"கிளந்தவல்ல" என் னும் அதிகாரப் புறனடையான் அமைக்கப்படும். கொன்றையஞ் சடைமுடி, 6 "புன்னையங்கானல்" என்புழிப்போல அம் சாரியை பெற்றது. 7பொதியில் என்பது பாடமாயின் பொதியிலாகிய வெள்ளியம்பலம் என்க. நள் - நளியென்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது; நளி - செறிவு. நள்ளென்னும் ஓசையுமாம். முதிர்வினை - தீவினை யெனக்கொண்டு, அதனால் இங்ஙனம் முடிந்ததாகலின் என் றுரைத்தலுமாம். பைந்தொடியும் கூந்தலும் அண்மைவிளி. எல்லை - பகற்பொழுது. ஈனோர் - இவ்வுலகத்தோர்; ஈன் - இவ்விடம் என்னும் பொருட்டு.

[அடி. வீரபத்தினி - மறக்கற்புடையாள். கோப்பெருந்தேவி அறக்கற்புடை யாள்; ஆக ஆறிய கற்பும் சீறிய கற்பும் எனக் கற்பு இருவகை.

கட்டுரை - பொருள் பொதிந்த சொல்; உறுதியுடைய சொல்லுமாம்.]


1. சிலப். 22; 155 2. சிலப். 23; 173-4. 3. தொல். சொல். 316. 4. கலி. 67,
5. தொல். எழுத். 483. 6. அகம். 80. 7. சிலப். அரும்.