|
55
60 |
அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற்
றாவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுளென
|
|
அரைசு
இயல் பிழைத்தோர்க்கு - அரசர் முறை செய்தலிற் சிறிது வழுவினும் அவர்க்கு, அறம் கூற்று
ஆவதூஉம் - அறக் கடவுளே கூற்றமாகும் என்பதுவும், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
- புகழமைந்த கற்புடை மகளை மக்களே யன்றித் தேவர் முனிவர் முதலாயினாரும் ஏத்து தல்
இயல்பு என்பதும், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என் பதூஉம் - முன் செய்த தீவினை உருக்கொண்டு
வந்து தன் பயனை நுகர்விக்கும் என்பதும், சூழ்வினைச் சிலம்பு காரணம் ஆக - சிற்ப வினை
பொருந்திய சிலம்பு காரணமாகத் தோன் றினவாதலின், சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
- சிலப்பதி காரமென்னும் பெயருடன், நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் என -
ஒரு காப்பியமாக நாம் அம் மூன்றுண்மை களையும் நிறுத்துதும் என்று அடிகள் சொல்ல,
அரைசு, போலி, கூற்றாவது - கொல்வ தென்றபடி. அறம்
கொல்லுமாறு,
1.
"என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை யறம்"
என்பதனானறியப்படும், பத்தினிக்கு, வேற்றுமை மயக்கம்.
உருத்து - வெகுண்டு என்றுமாம். இரு வினையும் செய்த முறையே வந்து ஊட்டுமென்பாரு முளர். தோன்றினமையின்
எனவும் அவற்றை எனவும் விரித்துரைக்க. பாட்டு உடைச் செய்யுள் - இசைப்பாட்டுக்களை இடையே
உடைய தொடர்நிலைச் செய்யுள் என்க. உரைப் பாட்டையும் இசைப் பாட்டையு முடைய என ஈண்டு
அடியார்க்கு நல்லார் கூறியது மிகை, மேல் உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் என்பராகலின். |
1.
திருக்குறள். அதி. 8 : 7
|
|