|
35
|
குரல்வாய் இளிவாய்க்
கேட்டனள் அன்றியும
|
|
குரல்வாய்
இளிவாய்க் கேட்டனள் - குரலிடத்தும் அதற்கு ஐந்தாம் நரம்பாகிய இளியிடத்தும் இசை
ஒத்திருத்தலைத் தன் செவியால் அளந்தறிந்தனள் ;
குரல் முதலாக எடுத்து இளி குரலாக வாசித்தாள் என்பர் பழைய உரையாள ரிருவரும். இனி, வட்டப்பாலை
இடமுறைத்திரிபு கூறுகின்றார் எனத் தொடங்கி, உழை குரலாய்க் கோடிப்பாலையும் குரல் குரலாய்ச்
செம்பாலையும், 1 விளரி குரலாய்ப் படுமலைப்பாலையும், துத்தம் குரலாய்ச் செவ்வழிப்பாலையும்,
இளி குரலாய் அரும்பாலையும் கைக்கிளை குரலாய் மேற்செம்பாலையும், தாரம் குரலாய் விளரிப்பாலையும்
பிறக்குமென்றார் அடியார்க்கு நல்லார். இவ்வுழி இப் பொருள் கொள்ளுதற்குச் செய்யுளில்
யாதுஞ் சொல்லில்லை. மற்றும், குரல்முத லேழும் முறையே குரலாய் நிற்கச் செம்பாலை, படுமலைப்பாலை,
செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை என்னும் ஏழ்
பெரும்பாலையும் பிறக்குமென ஆய்ச்சியர் குரவையுள்ளும், திவாகரம் முதலிய நிகண்டுகளினுள்ளும்,
கூறப்பட்டுளது. அரங்கேற்றுகாதையுள்ளே உழை குரலாகச் செம்பாலையும், கைக்கிளை குரலாகப்
படுமலைபாலையும், துத்தம் குரலாகச் செவ்வழிப்பாலையும், குரல் குரலாக அரும்பாலையும், தாரம்
குரலாகக் கோடிப்பாலையும், விளரி குரலாக விளரிப்பாலையும், இளி குரலாக மேற்செம்பாலையும்
பிறக்குமெனக் கூறப்பட்டுளது. இவ்விருவகையினும் வேறுபடப் பாலையேழும் பிறக்குமென ஈண்டு
அடியார்க்குநல்லார் கூறியுள்ளார்.
|
|