|
40
|
உழைமுத
லாகவும் உழையீ றாகவும்
குரல்முத லாகவுங் குரலீ றாகவும்
அகநிலை மருதமும் புறநிலை மருதமும்
அருகியல் மருதமும் பெருகியல் மருதமும்
நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி
|
|
உழை
முதலாகவும் உழை ஈறாகவும் குரல் முதலாகவும் குரல் ஈறாகவும் - உழைமுதல் உழையீறு குரல் முதல்
குரலீறு ஆகவும், அகநிலை மருதமும் புறநிலை மருதமும் அருகியல் மருதமும் பெருகியல் மருதமும்
- அகநிலை புறநிலை அருகியல் பெருகியல் எனப்படும் மருதத்தின், நால்வகைச் சாதி நலம்
பெற நோக்கி - நால்வகைச் சாதிப் பண்களையும் நலம்பெற நோக்கி ;
ஐந்து - இளி ; ஆவது சட்சம் ; ச ப
முறையாலென்க. உழை முதலாக அகநிலை மருதம், உழை யீறாகப் புறநிலை மருதம், குரல் முதலாக
அருகியல் மருதம், குரலீறாகப் பெருகியல் மருதம் என நிரனிறையாகக் கொள்க. தமிழிலே
பாலையாழ் குறிஞ்சி யாழ், மருதயாழ், செவ்வழியாழ் எனப் பெரும்பண் நான்கு வகைப்படும்.
இவை ஒவ்வொன்றும் நந்நான்கு வகையினை யுடையன. இவற்றுள் பாலையாழுக்குத் திறன் ஐந்தும்,
குறிஞ்சி யாழுக்குத் திறன் எட்டும், மருதயாழுக்குத் திறன் நான்கும், செவ்வழி யாழுக்குத்
திறன் நான்கும் ஆகும். மற்றும் திறத்தின் வகை யாகப் பாலையாழுக்குப் பதினைந்தும்,
குறிஞ்சி யாழுக்கு இருபத்து நான்கும், மருதயாழுக்குப் பன்னிரண்டும், செவ்வழியாழுக்குப்
பன்னிரண்டும் உள்ளன. இவை யாவும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என நான்கு
சாதிகளாகப் பாகுபாடெய்தும், பெரும் பண்களில் ஒன்றாகிய மருதயாழுக்கு அகநிலை - மருதயாழ்,
புறநிலை - ஆகரி, அருகியல் - சாயவேளர் கொல்லி, பெருகியல்- கின்னரம் என்னும் பண்களாம்.
இங்கே இளங்கோவடிகள் அருளிச் செய்த அகநிலை மருதம், புறநிலை மருதம், அருகியல் மருதம்,
பெருகியல் மருதம் என்பன இவையேபோலும் ; பெரும்பண் பதினாறும் திறன் எண்பத்து நான்கும்,
இவற்றுளடங்காத தாரப்பண் டிறம், பையுள்காஞ்சி, படுமலை யென்னும் மூன்றும் ஆகப் பண்கள்
நூற்று மூன்றாயினவாறு காண்க.
இனி, உழை குரலாய கோடிப்பாலை அகநிலை
மருதமும், கைக்கிளை குரலாய மேற்செம்பாலை புறநிலை மருதமும், குரல் குரலாய செம்பாலை அருகியன்
மருதமும், தாரம் குரலாய விளரிப்பாலை பெருகியன் மருதமும் ஆமென்பர் அடியார்க்குநல்லார்.
இனி, அரும்பதவுரை யாசிரியர் இந் நான்கினையும் குறித்துக் கூறுவன வருமாறு:--
1. அகநிலைமருதமாவது 3ஒத்த கிழமை யுழைகுரன்
மருதம், துத்தமும் விளரியும் குறைபிற நிறையே." இதன் பாட்டு:-- ஊர்க
*இவை நான்கும் பழைய பதிப்புக்களில் பிழைபட்டிருந்தவை ஓர் அறிஞரால் திருத்தப்பட்டன
; (தமிழ்ப் மொழில் துணர் - 17, பக்கம் - 70 காண்க). சிறுபான்மை ஈண்டு எம்மாலும்
திருத்தப்பட்டன. திண்டேர் ஊர்தற் கின்னே, நேர்க பாக நீயா வண்ணம்'' நரம்பு பதினாறு.
2. ''புறநிலை மருதங் குரலுழை கிழமை,
துத்தங் கைக்கிளை குறையா மேனைத், தாரம் விளரி யிளிநிறை யாகும்.'' இதன் பாட்டு :--அங்கட்
பொய்கை யூரன் கேண்மை, திங்க ளோர்நாளாகுந் தோழி.'' நரம்பு பதினாறு.
3. ''அருகியன் மருதங் குரல்கிளை கிழமை,
விளரி யிளிகுறை யாகு மேனைத் துத்தங் தார முழையிவை நிறையே.'' இதன் பாட்டு:-- ''வந்தா
னூரன் மென்றோள் வளைய, கன்றாய் போது காணாய் தோழி.'' நரம்பு பதினாறு. (கிளை -
கைக்கிளை.)
4. ''பெருகியன் மருதம் பேணுங் காலை,
அகநிலைக் குரிய நரம்பின திரட்டி, நிறைகுறை கிழமை பெறுமென மொழிப.'' இதன் பாட்டு:--''மல்லூர்.........நே
|
|
|