|
|
திறந்து வழிப்படூஉந்
தெள்ளிசைக் கரணத்துப்
புறத்தொரு பாணியிற் பூங்கொடி மயங்கிச் |
|
திறத்து
வழிப்படூஉம் தெள்ளிசைக் கரணத்து - அவற்றின் வழிப்படும் திறப்பண்களைப் பாடுதல் செய்யுமிடத்து,
புறத்து ஒரு பாணியிற் பூங்கொடி மயங்கி - நெஞ்சு கலங்கினாளாதலின் எடுத்த பண்ணுக்குப்
புறமாகியதோ ரிசையிலே அவள் மயங்கி;
வழிப்படூஉந் திறத்தென
மாறுக. தெள்ளிசைக் கரணம் யாழினும் மிடற்றினும் பாடுஞ் செய்கை. புறத்தொரு பாணியில்
என்பதற்குப் புறநிலை மருதப் பண்ணில் என்றும், புறநீர்மை யென்னுந் திறத்தில் என்றும்
உரைப்பாருமுளர்.
|
|