8. வேனிற் காதை



70

பசந்த மேனியள் படருறு மாலையின்
வசந்த மாலையை வருகெனக் கூஉய்த்
தூமலர் மாலையிற் றுணிபொரு ளெல்லாங்
கோவலற் களித்துக் கொணர்க ஈங்கென


68
உரை
71

          பசந்த மேனியள் - பசப்புற்ற மேனியை யுடையளாய், படர் உறு மாலையின் - நினைவு மிகும் மாலைக் காலத்தே, வசந்தமாலையை வருகெனக் கூஉய் - வசந்தமாலையை வருக வென அழைத்து, தூமலர் மாலையில் துணி பொருள் எல்லாம் - இத் தூய மலர்மாலையில் எழுதிய தீர்ந்த பொருளை எல்லாம், கோவலற்கு அளித்துக் கொணர்க ஈங்கு என - கோவலற்கு ஏற்பச் சொல்லி இப்பொழுதே இங்கே கொணர்வாயாக என்றுரைக்க;

          வசந்தமாலை - மாதவியின் சேடி. மாலையினிடையதோர் தோட்டில் எழுதப்பெற்றதாகலின், அதனை மாலையிற் றுணிபொருள் என்றாள்; அன்றி அம் மாலை முழுதுமே காமன் றிருமுகமென்பது கருதியுமாம். அளிக்கவென்னாது அளித்துக் கொணர்க வென்றது இது காமன் திருமுகமாதலானும், முன் இவன் பிரிந்தது அறியாமையானாதலானும் என்க.

          இளவேனில் வந்தது கோலங் கொண்மி னென்று குயிலிசைக்க மாதவி விரும்பி ஏறிக் கையுறை யேந்தி மயங்கி இருக்கையளாகிக் கேட்டனள்; அன்றியும் நலம்பெற நோக்கிக் கழிப்பிப் பாணியில் மயங்கிச் செவ்வியளாகிக் கைக்கொண்டு அளைஇ எழுதிக் கூய் அளித்துக் கொணர்க ஈங்கென்றாள் என வினை முடிக்க.