|
75
|
திலகமும் அளகமுஞ் சிறுகருஞ்
சிலையுங்
குவளையுங் குமிழுங் கொவ்வையுங் கொண்ட
மாதர்வாண் முகத்து மதைஇய நோக்கமொடு
காதலின் தோன்றிய கண்கூடு வரியும்
|
|
திலகமும்
அளகமும் - திலகத்தையும் கூந்தலையு முடைய, சிறுகருஞ் சிலையும் குவளையும் குமிழும் கொவ்வையும்
கொண்ட - சிறிய கரிய வில்லையும் நீலமலரையும் குமிழம் பூவையும் கொவ்வைக் கனியையும்
உறுப்பாகக் கொண்ட, மாதர் வாண் முகத்தின் - காதலையுடைய ஒள்ளிய முகத்தின், மதைஇய
நோக்கமொடு - மதர்த்த நோக்கத்தோடே, காதலிற் றோன் றிய கண்கூடு வரியும் - என்மேற்
காதலுடையாள்போற் றோன்றி முதற்கண் எதிர்முகமாக நின்று நடித்த நடிப்பும்;
புருவம் முதலியன சிலை முதலிய
உவமங்களாற் குறிக்கப்பட்டன. கண்கூடு - எதிர்முகமாதல்.
|
|