|
10 |
வளங்கெழு பொதியில்
மாமுனி பயந்த
இளங்கால் தூதன் இசைத்தன னாதலின்
மகர வெல்கொடி மைந்தன் சேனை
புகரறு கோலங் கொள்ளுமென் பதுபோற்
கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும்
படையுள் படுவோன் பணிமொழி கூற
|
|
வளம்
கெழு பொதியில் மாமுனி பயந்த - வளம் பொருந்திய பொதியின்மலையிடத்துச் சிறந்த முனிவன்
பெற்ற, இளங்கால் தூதன் இசைத்தனன்் ஆதலின் - தென்றலாகிய தூதன் குயிலோனுக் குரைத்தனன்
ஆதலானே, மகர வெல் கொடி மைந்தன் சேனை - வெற்றி பொருந்திய மகரக் கொடியையுடைய காமன்
சேனையாயுள்ளா ரெல்லாரும், புகர் அறு கோலம் கொள்ளும் என்பதுபோல் -- குற்றமற்ற கோலத்தைக்
கொண்மின் என்னும் பொருள் பயப்ப, கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும் படையுள் படுவோன்
- கொடிகள் நெருங்கிய சோலையென்னும் பாசறையிலிருக்கும் அக் குயிலோன் என்னும் சின்னமூதி,
பணிமொழி கூற - காற்றூதன் தனக்குப் பணித்த மொழியைச் சேனைக்குக் கூற ;
அந்தணன் தூதிற்குரியனாகலின்
மாமுனி பயந்த என்றார். இளங்காற்றூதன் - இளங்காலாகிய தூதன், இளைய காற்றூதன் ; காற்றூதன்
- ஒட்டன். சேனை -- மகளிர். புகரறு கோலம் -அக்காலத்துக்கேற்ப உடுத்து முடித்துப் பூசி
பூணுதல் ; போர்க் கோலமென்றுமாயிற்று. கொள்ளும் - கொண்மின். என்பது போல் - என்ன.
படையுள் படுவோன் - படைச்சிறுக்கன் ; காளமூதி. . |
|