|
85
|
அந்தி மாலை வந்ததற்
கிரங்கிச்
சிந்தைநோய் கூருமென் சிறுமை நோக்கிக்
கிளிபுரை கிளவியும் மடவன நடையுங்
களிமயிற் சாயலுங் கரந்தன ளாகிச்
செருவேல் நெடுங்கண் சிலதியர் கோலத்து
ஒருதனி வந்த உள்வரி யாடலும்
|
|
அந்தி
மாலை வந்ததற்கு இரங்கி - யான் ஊடிப் பிரிந்த காலத்து அந்தி மாலை வந்ததாகப் பிரிவாற்றாமையால்
இரங்கி, சிந்தை நோய் கூரும் என் சிறுமை நோக்கி - சிந்தையில் நோய் மிகும் என்
வருத்தத்தை நோக்கி, கிளி புரை கிளவியும் - கிள்ளையை யொத்த சொல்லையும், மட அன
நடையும் - மடப்பத்தை யுடைய அன்னமன்ன நடையினையும், களிமயிற் சாயலும் - களிப்பையுடைய
மயில்போலுஞ் சாயலினையும், கரந்தனள் ஆகி - மறைத்தவளாகி, செருவேல் நெடுங்கட் சிலதியர்
கோலத்து - போர்புரியும் வேல்போன்ற நெடிய கண்ணை யுடைய சிலதியர் கோலத்தைக் கொண்டு,
ஒரு தனி வந்த உள்வரி ஆடலும் - தான் தனியே வந்து நின்று நடித்த உள்வரி யென்னும் நடிப்பும்;
சிலதியர் - ஏவற்பெண்டிர்;
சிறு குறுந்தொழிலியர். உள்வரி - வேற்றுருக்கொள்ளுதல். |
|