|
|
பிரிந்துறை
காலத்துப் பரிந்தன ளாகி
என்னுறு கிளைகட்குத் தன்னுறு துயரம்
தேர்ந்துதேர்ந் துரைத்த தேர்ச்சிவரி யன்றியும்
|
|
பிரிந்து
உறை காலத்துப் பரிந்தனள் ஆகி - நான் பிரிந்துறையும் பொழுதில் தான் பிரிவாற்றாது
வருந்தினளாகப் பாவித்து, என் உறு கிளைகட்கு - எனது மிக்க கிளைகளாயினார்க்கு, தன்
உறு துயரம் - தனது மிக்க துயரத்தை, தேர்ந்து தேர்ந்து உரைத்த தேர்ச்சி வரி அன்றியும்
- தேர்ந்து தேர்ந்து உரைக்கின்றாளாக நடித்த நடிப்பும், அதுவன்றியும்;
|
|