|
110
|
ஆடல்
மகளே ஆதலின் ஆயிழை
பாடுபெற் றனவப் பைந்தொடி தனக்கென
|
|
ஆடல்
மகளே ஆதலின் ஆயிழை - ஆயிழாய், நாடக மகளே யாதலால், பாடு பெற்றன அப் பைந்தொடி
தனக்கு என - இங்ஙனம் நடித்த நடிப்புக்கள் அப் பைந்தொடிக்குப் பெருமையாவனவே என்று கூற;
ஆயிழை-வசந்தமாலை; விளி. பைந்தொடி
ஆடன் மகளாதலின் நடிப்புக்கள் அவட்கு இயல்பாவனவே என்று கூறி ஓலையை மறுத்தானென்க. மாதவியின்
செய்கையில் வைத்து எண்வகை வரியையும் விளக்கிய திறப்பாடு வியத்தற்குரியது.
|
|