|
|
அணித்தோட்டுத் திருமுகத்
தாயிழை எழுதிய
மணித்தோட்டுத் திரு முகம் மறுத்ததற் கிரங்கி
வாடிய உள்ளத்து வசந்த மாலை
தோடலர் கோதைக்குத் துனைந்துசென் றுரைப்ப |
|
அணித்தோட்டுத்
திருமுகத்து ஆயிழை எழுதிய - அழகிய பொற்றோடு அணிந்த திருமுகத்தையுடைய மாதவி யெழுதிய,
மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி - அழகிய தாழந்தோட்டுத் திருமுகத்தைக்
கோவலன் மறுப்பத் தான் அதற்கு வருந்தி, வாடிய உள்ளத்து வசந்தமாலை - வாட்டமுற்ற உள்ளத்தையுடைய
வசந்தமாலை, தோடு அலர் கோதைக்குத் துனைந்து சென்று உரைப்ப - இதழ் விரிந்த மாலையையுடைய
மாதவிக்கு விரைந்து சென்று உரைக்க;
அணியும் மணியும் அழகு. தோடு-பொற்றோடும் தாழந்தோடும். |
|