|
15
|
மடலவிழ் கானற் கடல்விளை
யாட்டினுள்
கோவலன் ஊடக் கூடா தேகிய
மாமலர் நெடுங்கண் மாதவி விரும்பி
வானுற நிவந்த மேனிலை மருங்கின
வேனிற் பள்ளி ஏறி மாணிழை |
|
மடல்
அவிழ் கானற் கடல் விளையாட்டினுள் - கடல் விளையாட்டின்கண்ணே பூக்கள் இதழ் விரியுங்
கானலிடத்து, கோவலன் ஊடக் கூடாது ஏகிய-கோவலன் ஊடிச் சென்றமையால் அவனுடன் கூடாது தமியளாய்த்
தன் மனையிற் புக்க, மா மலர் நெடுங்கண் மாதவி - கரிய மலர் போலும் நெடிய கண்களையுடைய
மாதவி, விரும்பி - அதற்கு விரும்பி, வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் - வானிலே
பொருந்த வுயர்ந்த மேனிலையின் ஒரு பக்கத்தே, வேனிற் பள்ளி ஏறி -இளவேனிற் குரிய
நிலா முற்றமாகிய இடத்திலே ஏறி ;
ஊடல் ஈண்டு வெறுத்தல்.
மா - கருமை. கோலங் கொண்மி னென்று படையுள் படுவோன் கூறிய அதற்கு விரும்பியென்க.
பள்ளி - இடம்.
|
|