|
2
|
ஊடினீர் எல்லாம் உருவிலான்
றன்ஆணை
கூடுமின் என்று குயில்சாற்ற -- நீடிய
வேனற்பா ணிக்கலந்தாள் மென்பூந் திருமுகத்தைக்
கானற்பா ணிக்கலந்தாய் காண்.
|
|
(ஊடினீரெல்லாம்.........காண்)
ஊடினீர் எல்லாம் - உலகில் ஒருவனும் ஒருத்தியுமாயுள்ளோரின் ஊடினவர்களே நீயிரெல்லாம்,
உருவிலான்றன் ஆணை - அநங்கன் ஆணை, கூடு மின் என்று குயில் சாற்ற - கூடுவீராக வென்று
குயிற்குலங்கள் சாற்ற, நீடிய வேனற் பாணிக் கலந்தாள் - இளவேனிற் பொழுதில் நின்னோடு
என்றும் கலந்தவளுடைய, மென் பூந் திரு முகத்தை - மெல்லிய பூவிலெழுதிய திருமுகத்தை, கானற்
பாணிக்கு அலந்தாய் காண் - கானலிடத்து அவள் பாடிய பாட்டிற்கு வருந்தினவனே காண்பாயாக;
நீடிய கானற்பாணி என்றுமாம்.
பாணி இரண்டனுள் முன்னது பொழுது; பின்னது பாட்டு. இதனைக் காணென்று ஓலையை நீட்டினாள்
என்க.
வேனிற் காதை முற்றிற்று.
|
|