8. வேனிற் காதை

 

20

வேனிற் பள்ளி ஏறி மாணிழை
தென்கடல் முத்துந் தென்மலைச் சந்தும்
தன்கடன் இறுக்குந் தன்மைய வாதலின்
கொங்கை முன்றிற் குங்கும வளாகத்து
மையறு சிறப்பின் கையுறை யேந்தி


18
உரை
22

         மாண் இழை - அந்த மாட்சிமைப்பட்ட இழையினை யுடையாள், தென்கடல் முத்தும் தென்மலைச் சந்தும் - தென் கடலின் முத்தும் பொதியின் மலைச் சந்தனமும், தன் கடன் இறுக்கும் தன்மைய ஆகலின் - அக்காலத்திற்கு எப்பொழுதும் தான் கடனாக இடக்கடவ திறையாகலான், கொங்கை முன்றிற் குங்கும வளாகத்து-பின்பனிக் காலத்திற் குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்ட முலைமுற்றமாகிய பரப்பிலே, மைஅறு சிறப்பிற் கையுறை ஏந்தி - குற்றமற்ற சிறப்பினையுடைய அம் முத்தையும் சந்தனத்தையும் கையுறையாக ஏந்தி: தன் என்றது மாதவியை. வளாகம் - பரப்பு. கையுறை- காணிக்கை ; பாகுடம். ஏந்தி யெனவே பூண்டும் பூசியுமென்ப தாயிற்று. காணிக்கை காட்டுவார் காண்பார் முன்றிலிற்கொணர்ந்து காட்டுவாராகலிற் கொங்கை முன்றிலில் ஏந்தி என்றார். ஈண்டு முற்றமாவது மார்பு.
.